Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்காச்சோளத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் என்ன பயன்கள்...?

Webdunia
வெள்ளி, 10 டிசம்பர் 2021 (13:45 IST)
மஞ்சள் சோளத்தில் உள்ள நிறமிச்சத்து, பார்வைத்திறனை அதிகரிப்பது மட்டுமன்றி, தேகத்திற்கு பொலிவைக் கொடுக்கவும் உதவுகிறது. ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் முதன்மை சிற்றுண்டியாக சோளத்தை நாடலாம். 

சிறுவர் சிறுமிகளுக்கு விருப்ப சிற்றுண்டியாகவும் சோளம் மாறும் என்பதில் சந்தேகமில்லை. அவர்களுக்குப் பிடித்த மாதிரி சோளத்தை தயார் செய்து வழங்கலாம்.
 
மக்கா சோளத்தில் வைட்டமின் பி சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. அதிலும் குறிப்பாக டயாமின் மற்றும் நியாசின் ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன.
 
அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படுவது, ஞாபக மறதி நிலை மற்றும் தோல் சம்பந்தமான வியாதிகள் உடலில் நாசின் சத்து குறைபாட்டால் ஏற்படுகின்றது.
 
மக்கா சோளம் தொடர்ந்து தயாமின் மற்றும் நியாசின் சத்துக்கள் கிடைக்கப்பெற்று, மேற்கூறிய குறைபாடுகள் நீங்கி உடலை வலுப்படுத்தி ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது.
 
மக்கா சோளத்தை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிடுவதால் நார்ச்சத்து நமக்கு முழுமையாக கிடைக்கின்றது. இதனால், மூல நோய் ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
 
மக்காச்சோளத்தில் சரியான அளவில் கார்போ ஹைட்ரேட் மற்றும் கலோரிகளை கொண்டது. மக்காச்சோளத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும். மேலும் பார்வைக் கோளாறு ஏற்படாமல் தடுத்து கண்களை பாதுகாக்கும் தன்மை கொண்டது.

தொடர்புடைய செய்திகள்

எவ்வளவு செல்சியஸ் வெயில் இருந்தால் என்ன அலெர்ட்? – பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?

செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

தண்ணீர் குறைவாக குடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

பெண்கள் மேம்பாட்டுக்கான "அன்பு" என்ற புதிய சேவை! சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் தொடக்கம்!

கோடை வெயிலில் தாக்கும் ஹீட் ஸ்ட்ரோக்! பாதுகாப்பாக இருப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments