அவகோடா பழத்தின் அற்புத நன்மைகள் என்னென்ன...?

Webdunia
அவகோடா பழத்தில் அதிகமான நார்ச்சத்துக்கள் இருக்கிறது. அவகோடா பழத்தில் உள்ள வைட்டமின் சத்துக்கள் கொழுப்புகளை குறைக்கும். வைட்டமின் எ, டி, கே, இ போன்ற வைட்டமின்கள் உள்ளன.

அவகோடா பழத்தில் ஒமேகா 3, ஃபேட்டி அமிலம், வைட்டமின் எ சத்துக்கள் அதிகமாக அடங்கியுள்ளது. இந்த பழத்தை சாப்பிடுவதால் நமது மூளையானது அதிகமாக செயல்படும் ஆற்றல் வாய்ந்தது.
 
அவகோடா பழத்தின் நன்மைகள் இருதய சம்பந்தமான பிரச்சனைகள் வருவதை தடுத்து நிறுத்தும். கருவுற்ற பெண்கள் இந்த அவகோடா பழத்தை தாராளமாய் சாப்பிடலாம். அவகோடா பழத்தில் போலிக் எனும் வைட்டமின் அதிகமாக உள்ளது. இந்த போலிக் வைட்டமின் தாயிற்கும் வயிற்றில் இருக்கக்கூடிய குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக உள்ளது.
 
உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் அவகோடா பழத்தை தாராளமாய் உண்ணலாம். இந்த பழத்தில் இருக்கக்கூடிய சத்துக்கள் உடலில் இருக்கக்கூடிய தேவையற்ற கொழுப்புகளை நீக்கிவிடும். கவனிக்க வேண்டியவை இந்த பழம் சாப்பிட்டால் அதிக நேரம் பசி இருக்காது.
 
உடலுக்கு அவசியம் தேவைப்படும் மினரல் சத்து பொட்டாசியம். அவகோடா பழத்தில் அதிகமாக பொட்டாசியம் நிறைந்துள்ளது. பொட்டாசியம் சத்து நிறைய கிடைப்பதால் உடலில் இரத்த கொதிப்பு, நெஞ்சு வலி, சீறுநீரகத்தில் ஏற்படும் பிரச்சனைகளை இந்த அவகோடா பழத்தில் இருக்கக்கூடிய பொட்டாசியம் சத்துக்கள் நீக்கிவிடும்.
 
அவகோடா பழத்தில் அதிகமாக வைட்டமின் சி, இ அடங்கியுள்ளது. இந்த வைட்டமின் சத்துக்களால் நம் உடல்களில் ஏற்படக்கூடிய கை, கால் வீக்கங்களை குறைத்துவிடும். ஆர்த்ரடிஸ் நோய் வராமல் தடுக்க தினமும் அவகோடா பழத்தை எடுத்துக்கொண்டால் இந்த நோய் விரைவில் குணமாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடல் எடைக்கும் கொலஸ்ட்ராலுக்கும் தொடர்பு உண்டா? மருத்துவர்கள் சொல்வது என்ன?

பெண்களின் பிறப்புறுப்பு அரிப்புக்கான 6 முக்கிய காரணங்கள்!

மூன்று வேளை உணவை விட இது ரொம்ப முக்கியம்.. ஆரோக்கியம் குறித்த டிப்ஸ்..!

சர்க்கரை நோய் பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிய ஏ.ஐ. ஆய்வு!

தயிர் உணவு மட்டுமல்ல.. அழகுக்கும் உதவும்.. என்னென்ன பலன்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments