Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிகுந்த மருத்துவ குணமுள்ள அரியவகை மூலிகை சிவக்கரந்தை !!

Webdunia
சிவக்கரந்தை மிகுந்த மருத்துவ குணமுள்ள அரியவகை மூலிகைச்சடி. இது நல்ல வாசனையுடையது. இந்த மூலிகையை தினமும் பயன்படுத்தினால் நமது சரும அழகையும் மேம்படுத்த உதவுகிறது.

இந்த மூலிகை செடியை பூக்கும் முன்பே கொண்டுவந்து மண்ணில்லாமல் சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி வேரோடு எல்லா பாகங்களையும் இடித்து சூரணம் செய்து ஒரு புதிய மட்கலயத்தில் இட்டு கலாயவாயை கட்டி வைத்து கொள்ள வேண்டும்.
 
மருத்துவ பயன்கள்:
 
சிவக்கரந்தை மூலிகை செடி இரத்தத்திலுள்ள மாசுக்களை நீக்குகிறது. சொறி, சிரங்கு, கரப்பான் முதலிய தோல் நோய்கள் போகும். கபத்தை கரைக்கும்.நாற்பது நாட்கள் உட்கொண்டால் மேனி அழகு கூடும்.
 
சிவக்கரந்தையின் சாறு கல்லீரல், மண்ணீரல் சம்பந்தமான நோய்களை குணப்படுத்த வல்லது. சிவகரந்தையின் வேர் கஷாயம் மூலநோயை  குணப்படுத்தும்.சிவக்கரந்தை போடி மஞ்சள் காமாலையை முற்றிலும் குணப்படுத்தக் கூடியது.
 
சிவக்கரந்தை பொடி சிறுநீரக நோய்களை போக்க வல்லது. மேலும் இது உஷ்ணத்தால் ஏற்படும் வாந்தியை போக்கும். சிவகரந்தை பொடி நல்ல பசியை  தூண்டக்கூடிய ஒரு சிறந்த மூலிகை. அத்துடன் இது இரத்தத்தில் உள்ள மாசுக்களை நீக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோடையில் அதிகரிக்கும் நீர்க்கடுப்பு எனப்படும் சிறுநீர்ப் பாதை தொற்று: என்ன செய்ய வேண்டும்?

நடனம் ஆடினால் ரத்த அழுத்தம், மனச்சோர்வு பிரச்சனை சரியாகுமா? ஆய்வு முடிவு..!

கோடை வெயிலுக்கு உகந்த கம்பங்கூழ்.. என்னென்ன பலன்கள் தெரியுமா?

ஐஸ் கட்டி நீர் தெரபியால் கிடைக்கும் பலன்கள்..!

சைலண்ட் ஹார்ட் அட்டாக்.. கவனிக்காவிட்டால் உயிருக்கே ஆபத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments