பலவகையான பூக்களும் அவற்றின் மருத்துவ குணங்களும்...!!

Webdunia
அகத்திப்பூ: அகத்திப்பூவை சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக்கி பாலில் காய்ச்சி சர்க்கரை சேர்த்து தினமும் சாப்பிட்டு வர சில நாட்களிலேயே உடல் சூடு, பித்த சூடு நீங்கும்.
நெல்லிப்பூ: உடலுக்கு குளிர்ச்சி, இதனுடன் விழுதி இலை, வாத நாராயணா இலை சேர்த்து கசாயம் வைத்து இரவில் சாப்பிட காலையில்  சுகபேதி உண்டாகும். மலச் சிக்கலுக்கும் இது உகந்தது.
 
இலுப்பைப் பூ: இலுப்பை பூவை பாலில் போட்டுக் காய்ச்சி தினம் ஒரு வேளை பருகி வந்தால் தாது விருத்தி ஏற்படும். மேலும் தாகத்தையும்  இது விரட்டியடிக்கும்.
 
ஆவாரம் பூ: ரத்தத்துக்கு மிகவும் பயன் தரும் ஆவாரம் பூவை உலர்த்தி வேளை ஒன்றுக்கு 15 கிராம் நீரில் போட்டு கசாயமாக்கி பால்,  சர்க்கரை கலந்து காப்பியாக பருகிவர உடல் சூடு, நீரிழிவு, நீர்கடுப்பு போன்ற நோய் தீரும். ஆவாரம்பூவை உலர்த்தி கிழங்கு மாவுடன் கூட்டி,  உடலில் தேய்த்து குளிக்க கற்றாழை நாற்றம் நீங்கும். தோல் வியாதிகளும் குணமாகும்.
 
செம்பருத்திப்ப: இருதய பலவீனம் அடைந்தவர்கள் மற்றும் அடிக்கடி மார்பு வலியால் அவதிப்படுபவர்கள் இந்தப் பூவை தண்ணீரில் போட்டு காய்ச்சி காலையும், மாலையும் குடித்து வந்தால் இருதயம் பலமடையும்.
 
ரோஜாப்பூ: இந்த மலரின் மணம் மனதிற்கு மட்டுமின்றி, இருதயத்திற்கும் வலிமை தரக்கூடியது. பாலில் ரோஜா இதழ்களை தூவி குடித்து  வந்தால் நெஞ்சில் இருக்கும் சளி நீங்கும். இரத்த விருத்திக்கும் துணை செய்யும் மலர் இது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தயிர் உணவு மட்டுமல்ல.. அழகுக்கும் உதவும்.. என்னென்ன பலன்கள்?

நீடித்த ஆரோக்கியத்துக்கு 8 முக்கிய பழக்கங்கள்: ஹார்வர்டு மருத்துவர் அறிவுரை

உடல் பருமனால் கருத்தரிப்பதில் சிக்கலா? தாழ்வு மனப்பான்மை மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை

புற்றுநோய் வருவதற்கான அறிகுறிகள் என்ன? தடுப்பு முறைகள் குறித்த விளக்கம்..!

தினம் ஒரு கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? பயனுள்ள தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments