Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் அற்புத மருந்து வல்லாரை கீரை !!

Webdunia
வல்லாரைக்கீரையை ஒரு துவையலாகவோ அல்லது வெறும் வல்லாரைக்கீரையை அரைத்து, விழுதாகவோ, தண்ணீர் விட்டு விழுங்கிடலாம். இதை போன்று தினமும் தொடர்ந்து செய்து வரும்போது, எந்த வித தோல் நோயாக இருந்தாலும் சரியாகிவிடும்.

நமது மூளைக்கு தேவைப்படும் ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் நிறைந்தது இந்த வல்லாரைக்கீரை. அதனால்தான் இந்த வல்லாரைக்கீரைக்கு சரஸ்வதி என்று மற்றொரு பெயரும் உள்ளது.
 
மந்தமாக படிக்கும் குழந்தைகள், தொடர்ந்து இந்த வல்லாரைக் கீரையை, காலையில் வெறும் வயிற்றில் மூன்று வல்லாரைக் கீரை தொடர்ந்து பச்சையாகக் கொடுத்து வரும் பொழுது நன்கு மூளை வளர்ச்சி அடையும்.
 
வல்லாரை இலையை வாயில போட்டு நன்றாக மென்று அந்த சாறை குடித்து வந்தால் குடலில் இருக்கக்கூடிய புண், குடல் நோய், வாய் புண், வாய் துர்நாற்றம் அனைத்தும் சரியாகி விடும். வல்லாரை கீரையை, தினமும் சாப்பிடுபவர்களுக்கு கண் மங்கல் முற்றிலும் சரியாகும்.
 
கண் பார்வை தெளிவடையும். கண்களுக்கு நன்கு குளிர்ச்சியை தரக்கூடியது. அஜீரணக் கோளாறுகள் எல்லாவற்றையும் நீக்கக்கூடியது இந்த வல்லாரைக்கீரை.
 
வல்லாரைக் கீரையை நன்றாக அரைத்து தோசை மாவில் சேர்த்து , தோசையாக செய்து கொடுக்கலாம். இந்த தோசையும் மிகவம் சுவையுடன் இருக்கும். குழந்தைகளுடைய மூளை வளர்ச்சிக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
 
இளநரை இருப்பவர்களும் சரி, அல்லது தலையில் வெள்ளை முடி இருப்பவர்களும் சரி தொடர்ந்து இந்த வல்லாரைக் கீரையை சாப்பிட்டுட்டு வரும்பொழுது, அந்த வெள்ளை முடி கருமையாக மாற ஆரம்பிக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டீ, காபி அதிகமாக குடித்தால் இந்த பிரச்சினை வருமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

நீரிழிவு பாதம் வெட்டி அகற்றப்படுவதை தடுக்கும் உத்திகள்! - புரொஃபசர் M. விஸ்வநாதன் வழங்கிய உரை!

வெயில் காலத்தில் உடல் பாதுகாப்புக்கு பயன் தரும் வெங்காயம்..!

மூத்த குடிமக்களுக்கு பின்ஹோல் பியூப்பிலோபிளாஸ்டி மூலம் சிகிச்சை! - டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை!

`அல்சைமர்' எனும் மறதிநோய்.. இந்த நோயை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments