Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாசிப்பருப்பை பயன்படுத்தி சருமத்தை பளபளக்க செய்யும் குறிப்புகள்...!!

Webdunia
ஒரு ஸ்பூன் பாசி பருப்பு பொடியுடன் 2 ஸ்பூன் எலுமிச்சைசாறு கலந்து முகத்தில் தேய்த்து விடுங்கள். 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி வர சருமத்தையும், அழகையும் தரும்.

1 ஸ்பூன் பாசிப்பருப்பு பொயை எடுத்து அதனை ஆலிவ் எண்ணெயுடன் குழைத்து தினமும் முகத்தில் தடவி கொள்ளுங்கள். இதை 20 நிமிடம் கழித்து கழுவி விடுங்கள். இதை தொடர்ந்து செய்யும் போது, வயது அதிகமாக அதிகமாக சருமத்தில் ஏற்படும் மேடு பள்ளம் போன்ற அமைப்பு நீங்கும்.
 
பாசிப்பருப்பு, கசகசா, பிஸ்தா, ரோஜா மொட்டு இவற்றை நன்றாக காயவைத்து, பொடி செய்து இந்த பவுடரை சிறிதளவு பாலுடன் சேர்த்து முகத்தில் பூசி 25 நிமிடங்கள் கழித்த பிறகு கழுவினால் முகத்தின் கருந்திட்டுகள் காணாமல் போகும்.

1 ஸ்பூன் பாசிப்பருப்பு, 1 ஸ்பூன் கற்றாழை ஜெல் இரண்டையும் கலந்து முகத்தில் தடவுங்கள். இது விரைவில் கருமையை போக்கி முகத்தை பளிச்சென்று  மாற்றும்.
 
இந்த பவுடர்களை ஒரு காற்று புகாத ஒரு சிறு டப்பாவில் போட்டு பத்திரமாக வைத்து விடுவது நல்லது. இந்த பவுடரை தேவைக்கேற்ப பயன்படுத்தி கொள்ளலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூத்த குடிமக்களுக்கு பின்ஹோல் பியூப்பிலோபிளாஸ்டி மூலம் சிகிச்சை! - டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை!

`அல்சைமர்' எனும் மறதிநோய்.. இந்த நோயை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

வாய்வு வெளியேறும் போது சத்தம் வருவது ஏன்?

வெயில் காலத்திற்கேற்ற நன்னாரி சர்பத்.. சர்க்கரை நோயாளிகள் குடிக்கலாமா?

கேனில் அடைக்கப்பட்ட பானங்கள் குடித்தால் புற்றுநோய் வருமா? அதிர்ச்சி தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments