Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடல் எடையைக் குறைக்க முடியாமல் இருப்பதற்கான காரணங்கள் என்ன....?

Webdunia
நாம் நம் உணவில் நம்மை அறியாமல் சில உணவுப் பொருட்களை சேர்த்து வருவோம். அவ்வாறு சேர்ப்பதானால் நாம் எவ்வளவுதான் உடற்பயிற்சி செய்தாலும், அவை உடல் எடை குறையவிடாமல் தடுக்கும்.
பால் பொருட்களை எடையைக் குறைக்கும் சமயத்தில் எடுத்து கொண்டால், அதுவே உங்களுக்கு தடையை ஏற்படுத்தும். பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும்  மாட்டிறைச்சிகளை தவிர்க்க வேண்டும். இந்த உணவுகள் இதய நோய், புற்றுநோய் போன்றவற்றையும் ஏற்படுத்தும். குறிப்பாக இந்த வகை உணவுகள் உடல்  பருமனை உண்டாக்கும்.
 
உணவில் சிறிது சர்க்கரையை சேர்த்தாலும் அதனால் நீரிழிவு, பல் சொத்தை மற்றும் உடல் பருமன் போன்றவை ஏற்படும். என்ன தான் நீங்கள் டயட்டில்  இருந்து சர்க்கரை சேர்க்காமல் தவிர்ப்பது நல்லது.  
 
சமையல் எண்ணெயில் ஒமேகா-6 ஃபேட்டி அமிலம் அதிக அளவிலும், ஒமேகா-3 ஃபேட்டி அமிலம் குறைவான அளவிலும் உள்ளது. ஃபேட்டி அமிலங்களில் இப்படி ஏற்றத்தாழ்வு இருப்பதால், அதன் காரணமாக உடலினுள் அழற்சி ஏற்பட ஆரம்பிக்கும். எனவே சரிசம அளவில் அத்தியாவசிய ஃபேட்டி அமிலங்கள் நிறைந்த விர்ஜின் ஆலிவ் ஆயிலையோ அல்லது சமையல் எண்ணெயையோ தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துங்கள்.
 
எண்ணெய்யில் பொரித்த உணவுகள், பேக்கிங் செய்யப்பட்ட உணவுகள், பாக்கெட் உணவுகள், ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளில் தான் அதிகம் இருக்கும். இந்த  கொழுப்புக்கள் கெட்ட கொழுப்புக்கள். இவை உடலினுள் சென்றால் நல்ல கொழுப்புக்களின் அளவு குறைந்து, உடலினுள் அழற்சி ஏற்பட்டு, எடை அதிகரிப்பு, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றை சந்திக்க நேரிடும்.
 
கடைகளில் விற்கப்படும் டயட் சோடாக்கள், ஜூஸ், மில்க் ஷேக் போன்றவற்றைக் குடித்து வந்தாலும், அதில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையினால் உடல்  எடையை அதிகரிக்கும்.
 
சுத்திகரிக்கப்பட்ட மைதா மாவில் எந்த ஒரு சத்துக்களும் இருக்காது. எனவே பிரட், நூடுல்ஸ், சாதம், பாஸ்தா, பிஸ்கட் போன்றவற்றை டயட்டில் இருக்கும் போது தவிர்த்திடுங்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

அடுத்த கட்டுரையில்
Show comments