Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சளி மற்றும் காய்ச்சலை போக்க உதவும் துளசி கஷாயம்.....!!

Webdunia
இன்றைக்கு புதிது புதிதாக உருவாகும் அனைத்து விதமான நோய்களையும் கட்டுப்படுத்தும் அற்புத ஆற்றல் கொண்டது துளசி. இதனாலேயே துளசி செடியை நாட்டு மருத்துவத்தில் மூலிகைகளின் ராணி என்று அழைக்கப்படுகிறது. 

துளசி செடியின் இலை, பூ, வேர் மற்றும் தண்டுப் பகுதி என அனைத்தும் மருத்துவ குணம் நிறைந்ததாகும். நாள்தோறும் ஒரு துளசி இலையை மென்று தின்று  வந்தால், சிறுகுடல், பெருங்குடல், வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும்.
 
துளசியின் மகிமை துளசி செடியை வீட்டில் வளர்ப்பதற்கு மற்றொரு காரணம், இது மற்ற தாவரங்களை விட, அதிக அளவில் கார்பன்-டை-ஆக்ஸைடு வாயுவையும்  நச்சுப்புகையையும் தனக்குள் கிரகித்துக்கொண்டு அவற்றை சுத்திகரித்து, சுத்தமான காற்றை வெளியிடும் தன்மை கொண்டது. 
 
துளசி செடி இருக்கும் இடத்தில் பாம்பு, தேள் என எந்தவித விஷ ஜந்துக்களும் அண்டாது. மூலிகைகளின் ராணி மூலிகைகளின் ராணி எனப்படும் துளசி செடிக்கு திவ்யா, திருத்துழாய், துளவம், மாலலங்கல், விஷ்ணுபிரியா, பிருந்தா, துளசி, கிருஷ்ணதுளசி, ராமதுளசி என பல்வேறு பெயர்களும் உண்டு. 
 
துளசியின் மருத்துவ குணத்தால் நாட்டு மருத்துவத்திலும் ஆயுர்வேத மருத்துவத்திலும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. துளசி செடியின் இலை, பூ, வேர் மற்றும் தண்டுப் பகுதி என அனைத்தும் மருத்துவ குணம் நிறைந்ததாகும்.
 
துளசி நாள்தோறும் துளசி இலையை மென்று தின்று வந்தால், சிறுகுடல், பெருங்குடல், வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும். துளசி இலையை மென்று தின்று வந்தால் வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சனையும் காணாமல் போய்விடும். 
 
இன்றைக்கு புதிது புதிதாக உருவாகும் அனைத்து விதமான காய்ச்சலையும் கட்டுப்படுத்தும் அற்புத ஆற்றல் கொண்டது துளசி செடி. சிறு வயதில் இருந்தே துளசி இலைகளை மென்று தின்றுவந்தால், சர்க்கரை நோய் நாம் இருக்கும் திசையை எட்டிக்கூட பார்க்காது.
 
துளசி சாறு மகிமை துளசி இலையை சாறெடுத்து அதனோடு எலுமிச்சை சாறையும் சேர்த்து மிதமாக சூடுபடுத்தி கூடவே சிறிது தேன் கலந்து, உணவு சாப்பிட்ட பின் அரைமணி நேரம் கழித்து அருந்தி வந்தால் உடல் எடை குறைய தொடங்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments