Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அற்புத பலன்கள் தரும் வெங்காயத்தை இப்படி பயன்படுத்தி பாருங்க...!!

Webdunia
நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும். வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.

வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும். ஜலதோஷ நேரத்தில் வெங் காயத்தை  முகர்ந்தால் பலன் கிட்டும்.
 
வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப்போட தொண்டை வலி குறையும். பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் சாப்பிடவேண்டும். இதனால்  விஷம் இறங்கும்.
 
ஆறு வெங்காயத்தை நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும். வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில்  தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பின்பு மருத்துவரிடம் செல்ல வேண்டும்.
 
வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும். காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்று தின்ன காலரா தாக்காது.
 
ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும். சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏசியில் நீண்ட நேரம் இருந்தால் இளமையிலேயே வயதான தோற்றம் ஏற்படுமா? அதிர்ச்சி தகவல்..!

ஆரோக்கியத்தை கெடுக்கும் இன்றைய பழக்க வழக்கங்கள்.. முக்கிய தகவல்கள்

சிறுநீரில் வெள்ளை நிற நுரை இருந்தால் ஆபத்தா?

குங்குமப்பூ சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? ஆச்சரியமான தகவல்..!

கம்ப்யூட்டர் முன் அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்கிறீர்களா? இதை கண்டிப்பாக பின்பற்றுங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments