Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரும நோய்களுக்கான மருத்துவத்தில் சிறப்பான பங்காற்றும் திரிபலா !!

Webdunia
திரிபலா என்பது பாரம்பரிய ஆயுர்வேத மருந்து. இது ஒரு ரசாயனமாகவும், காயகல்பமாகவும் கருதப்படுகிறது. மூன்று மூலிகைகள் சேர்ந்த கூட்டுப்பொருள் தான் திரிபலா. அம்மூன்று மூலிகைகளாவன நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகும்.

திரிபலா என்பது அற்புதமான ஆயுர்வேத மருத்துவத் தயாரிப்பு ஆகும். ஆயுர்வேத மருத்துவர்களால், உலகம் முழுவதும் பரவலாக எந்த நோய்க்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுவது திரிபலா. 
 
நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய இம்மூன்றின் கலவையானது அற்புதமான காயகல்பமாகி, தேவர்களின் அமிர்தத்தினைப் போல் எந்த ஒரு வியாதியையும் தீர்க்கும் அற்புத சக்தியினைப் பெற்றுள்ளது.
 
திரிபலா சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பு மிக்க ஒரு மருந்தாக செயல்படுகிறது. உடலில் குளுகோஸின் அளவை சமநிலையில் பேணுவதில் பெரும் பொறுப்பு வகிப்பது “இன்சுலின்” ஆகும். திரிபலா நமது கணையத்தினைத் தூண்டி, இன்சுலினை சுரக்கச் செய்து சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கிறது. மேலும்கசப்புச் சுவையுடன் இருப்பதனால், சர்க்கரை நோயின் ஒரு நிலையான “ஹைப்பர்கிளைசீமியா” எனப்படும் அதீத சர்க்கரை நிலை உள்ளவர்கள் இதனை எடுத்துக் கொள்வது நன்மையளிக்கும்.
 
நமது உடலில் கொழுப்பு படிவதற்குக் காரணமான அடிபோஸ் செல்களைக் குறி வைத்து திரிபலா செயல்படுவதால், கொழுப்பின் அளவு குறைந்து, உடல் பருமன் கட்டுப்படுத்தப்படுகிறது.
 
திரிபலா சூரணம் இரத்தத்தினைச் சுத்தம் செய்து இரத்தத்திலுள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றும் தன்மை கொண்டிருப்பதால், சரும நோய்களுக்கான மருத்துவத்தில் சிறப்பான பங்காற்றுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தக்காளியில் இருக்கும் வைட்டமின் சத்துக்கள் என்னென்ன?

முழங்கால் செயற்கை தசைநார் சிகிச்சை! தமிழகத்தில் முதலிடம்! – ரெலா மருத்துவமனை!

சோம்பை உணவில் சேர்த்து கொள்வதால் ஏற்படும் பயன்கள்..!

பிரைடு ரைஸ் சாப்பிடுவதால் உடல்நலத்திற்கு ஏற்படும் தீங்குகள்..!

உடலுக்கு தேவையான புரதச் சத்துக்கள் உணவுகள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments