Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சருமத்தை பராமரிக்க வெந்தயத்தை வைத்து செய்யப்படும் பேஸ்பேக்...!

Webdunia
வெந்தயத்தைக் கொண்டு தலைமுடியின் ஆரோக்கியத்தை மட்டுமின்றி சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். வெந்தயம் எளிதில்  கிடைக்கக்கூடிய பொருள் என்பதால், இதனைக் கொண்டு சருமத்தை எளிதில் பராமரிக்கலாம்.
வெந்தயம் சிறந்த கிளின்சராகவும் செயல்படும். தினமும் வெந்தயத்தை பால் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 15 நிமிடம் மசாஜ் செய்து பின் கழுவ வேண்டும். இதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால் சருமத்துளைகளில் ஏற்பட்டுள்ள அடைப்புக்கள் அனைத்தும் நீங்கி, சருமம் சுத்தமாக இருக்கும்,  இதனை தினமும் செய்து வரலாம்.
 
வெந்தயத்தை 2 ஸ்பூன் எடுத்து ஒரு கப் நீரில் போட்டு கொதிக்க வையுங்கள்.நீர் குளிர்ந்ததும், சிறிது முகத்தில் தடவி சில நிமிடங்களுக்கு பிறகு அதே நீரில்  கழுவுங்கள். முகப்பருக்களை விரைவில் குணப்படுத்தும்.
 
வெந்தயத்தை நீரில் ஊற வைத்து பேஸ்ட் செய்து பால் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளீர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை வாரம் இருமுறை செய்து வரலாம். வெயில் காலத்தில் வெளியில் சென்று வந்தபின் இந்த பேஸ்பேக் போட்டு கொண்டால் சருமம் கருமை  அடைவதை தடுக்கலாம்.
 
வெந்தய பொடியை தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி, சிறிது நேரம் ஊற வைத்தி பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் முகத்தின் நிறம் அதிகரிக்கும். ஆனால் வெந்தயம் குளிர்ச்சிமிக்கது என்பதால், சுவாச பிரச்சனைகள் இருப்பவர்கள், இதனை வாரம் 2 முறை போடுவது நல்லது.
 
வெந்தயத்தை பொடி செய்து அதனை தேன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி ஸ்கரப் செய்து பின் கழுவ வேண்டும். இதனால் பருக்கள் வருவது தடுக்கப்படும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தினசரி ஓட்டம்: உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கான அற்புத மருந்து!

அவித்த முட்டை Vs ஆம்லெட்: ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது?

வெண்டைக்காய்: ரத்த அழுத்தம், சர்க்கரை நோயாளிகளுக்கு பலன்!

பெண்களுக்கு அதிக இதய நோய் பாதிப்பு! விழிப்புணர்வு தேவை..!

எடை குறைப்பிற்கு சைவ உணவே சிறந்தது: புதிய ஆய்வு முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments