Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நோய்களுக்கு தீர்வு தரும் கொடி பசலையின் பயன்கள்!!

Webdunia
முக அழகையும் சருமத்தில் பளபளப்பையும் கவர்ச்சியான நிறத்தையும் பெற பசலைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். பசலையின் வேர்ப்பகுதி மேற்பூச்சு மருந்தாகப் பயன்படுகிறது. இலைப்பசை வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
பசலைக் கீரையால் சிறுநீர் கடுப்பு, சிறுநீர் எரிச்சலுடன் வெளியாதல், வெள்ளை ஒழுக்கு அகியவை நீங்கும்.
 
பசலை ரத்தத்தை சுத்தப்படுத்தி உடலின் வெப்பத்தைக் குறைக்கக் கூடியது. இக்கீரையை வீக்கம், கட்டிகளுக்கு மேல் விளக்கெண்ணெய் விட்டு  வதக்கிக் கட்ட வீக்கம் வற்றிவிடும்.
 
கொடிப்ப பசலை ஒரு மேற்பூச்சு மருந்தாகி உள்ளுறுப்புகளின் அழற்சியைப் போக்குகிறது. சிறுநீரைப் பெருக்கி வெளியேற்றுகிறது.
 
வயிற்றுக் கோளாறுகளுக்கு மருந்தாவதோடு வயிற்றுப் பகுதிக்கு குளிர்ச்சி தருவதாகவும் உள்ளது. இலைச் சாற்றைக் குடிப்பதாலும் 10 முதல் 20 மி.லி. வரை மேலே பூசுவதாலும் ஆணுறுப்பில் ஏற்படும் புண்கள் விரைவில் ஆறும்.
 
பசலையின் சாற்றைப் மேல்பூச்சாக பூசுகிற போது உடல் அரிப்பு தீப்புண்கள், தழும்புகள், பருக்கள், மருக்கள் ஆகியவற்றுக்கும் பயன் தருகின்றன. குழந்தைகளின் சத்துக் குறைபாட்டை தடுக்கக் கூடியதாகவும் கொடிப்பசலைக் கீரை விளங்குகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்வுகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சிரமமின்றி கடக்க உதவும் யோகா! - சத்குருவின் ஆலோசனை!

தலைமுடி வளர என்னென்ன வைட்டமின்கள் தேவை?

தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!

வயதானவர்களை பாதிக்கும் கால் மூட்டு கீல்வாதம்.. அறிகுறிகள் என்ன?

காதுகளில் எறும்பு, பூச்சி புகுந்து விட்டால் என்ன செய்ய வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments