Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடலில் உள்ள சளி மற்றும் இருமலை வெளியேற்றும் தூதுவளை !!

Webdunia
வியாழன், 9 ஜூன் 2022 (12:11 IST)
தூதுவளையின் இலை கரும்பச்சை நிறத்தில் இருக்கும். இதன் பூ ஊதா நிறத்தில் இருக்கும். இதன் கொடியிலும், இலைகளிலும் முட்கள் காணப்படும். சிறிய காய்கள் தோன்றிப் பழுக்கும்.


இதன் இலை, பூ, காய், பழம், வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டது. குறிப்பாக ஆஸ்துமா நோய்க்கு இது மருந்தாகப் பயன்படுகிறது.

தூதுவளையின் முக்கிய குணம் உடல் உஷ்ணத்தை அதிகரிக்கக் கூடியது. தூதுவளையை உட்கொண்டால் உடல் உஷ்ணம் அதிகரிக்கும் அதனால் உடலில் உள்ள சளி வெளியேறும் இருமல் நீங்கும். கப நாடி, கப தோஷம் உடையவர்கள் தூதுவளையை அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம்.

இரைப்பு, ஆஸ்துமா, ஒவ்வாமை, அலர்ஜி, சளி, இருமல், தும்மல், மூக்கடைப்பு, மூக்கில் நீர் ஒழுகுதல், சைனஸ், ஒற்றைத் தலைவலி போன்ற பிரச்சனை உடையவர்களுக்கு தூதுவளை ஓர் அற்புதமான மூலிகையாகும்.

தூதுவளைக் கீரையை தினமும் சாப்பிட்டு வர சளி, காது மந்தம், காது எழுச்சி, காது குத்தல், உடல் எரிச்சல், தேக குடைச்சல் ஆகிய அனைத்தும் குணமாகும்.

தூதுவளைக் கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும், தாது விருத்தி அதிகரிக்கும், ஆண்மை சக்தியும் பெருகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

தினமும் 10 மணி நேரத்திற்கும் மேல் ஒரே நேரத்தில் உட்கார்ந்திருந்தால் வரும் ஆபத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments