Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல நோய்களுக்கு தீர்வு தரும் துத்தி இலை !!

Webdunia
பல நோய்களுக்கு தீர்வாக அமையும் துத்தி இலையில் உள்ள நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். துத்தி இலை,பூ, விதை, வேர் மற்றும் பட்டை ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை. 
 

மூலம் குணமாக துத்தி இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி, மூலம், பவுத்திரம் மற்றும் ஆசனவாய் கடுப்பு ஆகியவற்றின் மீது வைத்துக் கட்ட வேண்டும்.
 
துத்தி இலைச் சாற்றுடன் சிறிதளவு மஞ்சள் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூச புண்கள் குணமாகும். துத்தி இலைச் சாற்றை பச்சரிசி மாவுடன் கலந்து கட்டிகளின்  மீது வைத்துக் கட்ட கட்டிகள் உடையும்.
 
துத்தி வேர் பவுடர், திரிபலா, இந்துப்பு, லவங்கபட்டை பொடிகளுடன் தண்ணீரில் கலந்து நன்றாக வாய் கொப்பளித்தால் பல் ஈறுகளில் ரத்த கசிவு குணமாகும். துத்தி இலையை பருப்புடன் சேர்த்து சாப்பிட்டால் மூலச்சூடு நீங்கும். 
 
ஆசனவாய் கடுப்பு, சூடு நீங்க துத்தி இலை பொடியை நாட்டு பசும்பால், நாட்டு சக்கரையுடன் கலந்து சாப்பிட முற்றிலும் குணமாகும்.
 
துத்திக்கீரையை பொறியல் செய்து சாப்பிட்டால் வயிற்றுப்புழுக்கள் வாயு சம்மந்தப்பட்ட வியாதிகளும் குணமாகும். குடல்புண், தொண்டை கம்மல், சொரிசிரங்குகளையும் இதன் இலை கசாயம் குணமாக்கும்.
 
முறிந்த எலும்பை சரியாக கட்டி இலையை அரைத்து கனமாக பூசி துணியைச்சுற்றி அசையாமல் வைத்து இருந்தால் விரைவாக எலும்பு கூடி குணமாகும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments