Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுநீர் பற்றிய நோய்களை எளிதில் குணமாக்கும் தொட்டால் சிணுங்கி !!

Webdunia
வியாழன், 5 மே 2022 (12:32 IST)
தொட்டால் சிணுங்கி ஈரப்பதமான இடங்களில் தானே வளரக் கூடியது. சிறு செடி வகையைச் சார்ந்தது. இலைகள் ஜோடியாக எதிர் அடுக்கில் கூட்டாக இருக்கும். இலைகள் இடையில் ஊதா நிறப் பூக்கள் மேலே சிவப்பாகவும் அடியில் ஊதா நிறத்திலும் இருக்கும்.


இதன் இலைகளை மனிதர்கள் தொட்டாலும் அதிர்வு ஏற்பட்டாலும் தொடர்ச்சியாக இலைகள் மூடிக்கொள்ளும். தொட்டால் சிணுங்கியை ஒருவர் தொடுகின்ற போது அதனுடைய சக்தி மனிதனுள் மின்சாரம் போல் பாயும். 48 நாள் தவறாது தொட்டு வந்தால் உளவாற்றல் பெருகுமாம். இந்த மூலிகை காந்த சக்தி உடையது.

இதன் வேரையும் இலையையும் சம அளவில் எடுத்து உலர்த்தி துணியில் சலித்து வைக்கவும். இந்த சூரணம் -15 கிராம் பசும்பாலில் குடிக்க சிறுநீர் பற்றிய நோய்கள், மூலச்சூடு, ஆசனக்கடுப்பு தீரும். சூடு பிடித்தால் சிறுநீர்த் தாரை எரியும். இதற்கு 10 கிராம் இலையை அரைத்து 5 நாள் காலை தயிரில் சாப்பிட குணமாகும்.

ஆண்மைக்குறைபாடு உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து பாலில் 15 கிராம் கலந்து சாப்பிடவேண்டும். தொடர்ந்து 15 நாட்களுக்கு சாப்பிட்டு வர ஆண்மை பெருகும். இதன் இலை ஒரு பிடி அரைத்து எலுமிச்சையளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட வயிற்றுக் கடுப்பு குணமாகும், உடல் குளிர்ச்சியாகும், வயிற்றுப்புண்ணும் ஆறும், சிறுநீர் எரிச்சல் குணமாகும்.

தொட்டா சிணுங்கி இலை, வேர் இரண்டையும் காய வைத்து பொடி செய்து பாலில் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க சர்க்கரை நோய் குறையும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காதில் தண்ணீர் புகுந்து விட்டால் என்ன முதலுதவி செய்ய வேண்டும்?

பனங்கற்கண்டு எடுத்து கொள்வதால் ஏற்படும் நன்மைகள்..!

முருங்கைக்கீரையில் உள்ள சத்துக்கள் என்னென்ன?

அரைக்கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!

அதிகளவு எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments