ஏராளமான மருத்துவம் சார்ந்த நன்மைகளை அள்ளி தரும் அதிமதுரம்...!!

Webdunia
அதிமதுரப் பொடியை காலை மற்றும் இரவு வேளைகளில் எடுத்துக்கொண்டால், குடல் புண்கள் தவிர மற்ற அனைத்து வயிறு சம்மந்தமான பிரச்சினைகளும் நீங்கும். செரிமானம் அதிகரித்து உடல் ஆரோக்கியம் கூடும்.

அதிமதுரத்துடன், திப்பிலி போன்ற சில மூலிகைகளை பொடியாகச் சேர்த்து, நீரில் ஊறவைக்க வேண்டும். இந்த நீரை குழந்தைகள், பெண்கள் குடித்துவருவதால்  நாள்பட்ட இருமல் கூட விரைவில் சரியாகும். பொடியை உணவில் சேர்த்து வருவதால், தொண்டை கரகரப்பு மற்றும் குரல் வளம்பெரும்.
 
மஞ்சள் காமாலை, நெஞ்சுச்சளி, தலைவலி போன்றவற்றிற்கு சிறந்த மருத்துவமாக அதிமதுரம் இருக்கிறது. மேலும் தலைவலி மற்றும் நெஞ்சு சளியை வரவே  வராமலும் தடுக்க இயலும். மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிமதுரம் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். ஒருமுறை மஞ்சள் காமாலை வந்தவர்களுக்கு மீண்டும் வராமலும் இந்த அதிமதுர மூலிகை பயன்படுகிறது.
 
பெண்களுக்கு, வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள், சளி, இருமல் நீங்க, மூட்டு வலி சரியாக என பெரிய லிஸ்ட்டே உள்ளது. பெண்களுக்கு மிகச்சிறந்த நன்மைகளை அதிமதுரம் தரவல்லது. சுடு நீரில் இதன் பொடியைக் கலந்து தினமும் கூட குடிக்கலாம்.
 
அதிமதுர தூள் கலந்த நீரை தினமும் காலை மாலை என இரு வேளைகளிலும் ஆண்கள் எடுத்துக்கொள்வது நல்லது. இந்த அதிமருதத்தை ஊறவைத்தும் எடுத்துக்கொள்ளலாம். ஆண்களுக்கு இருக்கும் ஆஸ்த்துமா, இளநரை மற்றும் ஆண்மை குறைவு சம்பந்தமான சிக்கல்களையும் எளிதில் சரிசெய்யலாம்.
 
அதிமதுர தூளை ஊறவைத்து, பருகி வருவதால் மூட்டு வலி இருக்காது. உடலில் இருக்கும் வாதத்தன்மையானது குறைந்து இயல்பு நிலையில் இருக்கும். மேலும்  சிறுநீரகங்கள் நல்ல ஆரோக்கியமாக இருக்க அதிமதுரம் துணைநிற்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்பக சீரமைப்பு தினத்தில் (BRA Day 2025) மார்பகப் புற்றுநோயை வென்ற 100-க்கும் மேற்பட்டோரை ஒருங்கிணைத்த சென்னை மார்பக மையம்

பற்களை பாதுகாக்க எளிய வழிகள்: நீண்ட கால ஆரோக்கியத்திற்கான கையேடு

பப்பாளியின் அரிய மருத்துவப் பயன்கள்: செரிமானம் முதல் புற்றுநோய் வரை!

எம்ஜிஎம் மலர் மருத்துவமனையில் பக்கவாதத்திற்கான அதிவேக சிகிச்சை பதில்வினைக் குழு அறிமுகம்!

கேட்பது மட்டுமல்ல, உடல் சமநிலைக்கும் காரணம்: காதுக்குள் உள்ள 'காக்லியா' திரவ ரகசியம்!

அடுத்த கட்டுரையில்
Show comments