இத்தனை பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு தரும் தூதுவளை !!

Webdunia
தூதுவளையை உணவில் தேவையான அளவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், உடல் வலுவடைந்து நரம்பு சம்பந்த பிரச்சனை நீங்கும். மேலும் உடல்  இயற்கையாகவே எதிர்ப்புச் சக்தியைப் பெற்றுவிடும். அதனால் பல்வேறு தொற்று வியாதிகள் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

தூதுவளை கொண்டு ரசம் தயாரித்து, நோய் தாக்கம் ஏற்பட்டவர் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சளி, இருமல், மூக்கடைப்பு, மூச்சிரைப்பு போன்ற பல்வேறு  பிரச்சனைகளிலிருந்து எளிதாகக் குணம் அடைய முடியும்.
 
தூதுவளையில் கால்சியம் சத்து அதிகளவு காணப்படுகின்றது. இதனை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வதன் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்களின் எலும்புகள் மற்றும் பற்கள் பலமடையும். 
 
பெண்களுக்கு ஏற்படும் முதுகு வலி, இடுப்பு வலி போன்ற தொல்லைகள் நீங்கும். வாதம் மற்றும் பித்த பிரச்சனைகளால் பல்வேறு வியாதிகள் உடலில் ஏற்படும். இதற்குத் தூதுவளை மிகச் சிறந்த மருந்தாக உள்ளது.
 
தூதுவளை சர்க்கரை நோய்க்குச் சிறந்த மருந்து பொருளாக உள்ளது. இந்த இலை சற்று கசப்பு தன்மை கொண்டதாக இருக்கும். இதனைச் சாப்பிட்டவுடன் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் வரத் தொடங்கும். 
 
தூதுவளை செரிமான சம்பந்தமான கோளாறுகளை தீர்த்துவிடும். இது தூதுவளையின் மற்றொரு சிறப்பு. மேலும் ஜீரண சக்தி அதிகரிக்கும். குழந்தைகளுக்கு அவ்வப்போது துவையல் செய்து தரலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குளிர்காலத்தில் எந்த உணவுகளை சாப்பிடவேண்டும்? எதை தவிர்க்க வேண்டும்?!..

குளிர்காலத்தில் தயிர் சாப்பிடலாமா?!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் தூக்கம் இல்லாமல தவிக்கிறீர்களா?!.. இதை ஃபாலோ பண்ணுங்க!...

மாலை 6 மணிக்கு மேல் என்னென்ன உணவுகளை சாப்பிட்டால் ஆபத்து?...

கோழி.. ஆடு.. எந்த இறைச்சி உடலுக்கு நல்லது?!.. வாங்க பார்ப்போம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments