Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தக்காளி சாற்றில் உள்ள சத்துக்களும் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளும் !!

Webdunia
தக்காளியில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி, கந்தகம், மக்னீஷியம், பொட்டாசியம், சோடியம், இரும்பு மற்றும் சுண்ணாம்பு போன்ற சத்துகள் அடங்கியுள்ளன.


மேலும் இதன் சாறு அமிலத்தன்மை, உடல் பருமன் மற்றும் கண்களின் கடுமையான பிரச்சினையை நீக்குகிறது.
 
உடல் எடையை குறைக்க தினமும் காலையில் வெறும் வயிற்றில் தக்காளி சாறு அருந்தினால் போதும். ஏனென்றால் தக்காளி சாற்றில் மிகுந்த குறைவான கலோரிகள் தான் உள்ளது.
 
தக்காளி சாறு அருந்தினால் உடல் மற்றும் கல்லீரலில் இருக்கும் நச்சுப் பொருட்களை போக்கும். மேலும் இது கல்லீரல், பித்தப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க  உதவுகிறது.
 
தக்காளி சாறு உடலில் புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை தடுக்கிறது. ஏனென்றால் இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஃபோலிக் அமிலம், பீட்டா கரோட்டின் மற்றும் லுடீன் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. எனவே தினமும் தக்காளி சாறு குடிப்பதால் பதினெட்டு சதவீதம் புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கலாம் என  கூறப்படுகிறது.
 
இதயம் என்பது நமது உடலின் முக்கியமான ஒரு உறுப்பு. இந்த இதயத்தை பாதுக்காக்க இந்த தக்காளி சாறு மிகவும் உதவுகிறது. ஏனென்றால் இதில் நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் C மற்றும் கோலின் ஆகியவை உள்ளன. அவை இதயத்திற்கு ஆரோக்கியதை தருகின்றன. ஆகவே தினமும் ஒரு கிளாஸ் தக்காளி  சாறு குடிப்பது மிகவும் நல்லது.
 
தக்காளிச்சாற்றை முகத்தில் பூசி வருவதால் கோடைக்காலத்தில் முகத்தில் ஏற்படும் முகச்சுருக்கங்கள் மறைந்து தோல் மென்மையடைவதுடன் குளிர்ச்சியும்  உண்டாகும்.

தொடர்புடைய செய்திகள்

எவ்வளவு செல்சியஸ் வெயில் இருந்தால் என்ன அலெர்ட்? – பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?

செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

தண்ணீர் குறைவாக குடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

பெண்கள் மேம்பாட்டுக்கான "அன்பு" என்ற புதிய சேவை! சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் தொடக்கம்!

கோடை வெயிலில் தாக்கும் ஹீட் ஸ்ட்ரோக்! பாதுகாப்பாக இருப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments