Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொய்யா இலை கொதிக்க வைத்த நீரின் பயன்கள்...!!

Webdunia
கொய்யா இலையில் புரதம், வைட்டமின்கள் பி 6, கோலைன், வைட்டமின் சி, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், துத்தநாகம் போன்ற சத்துகளும், ஆன்டி-ஆக்ஸிடன்டுகள், ஆன்டி-பாக்டீரியல் போன்றவை இருக்கிறது. கொய்யா இலை துவர்ப்பு சுவை உடையது.

கொய்யா இலைகளில் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட், ஆன்டி பாக்டீரியா எதிர்ப்பு, நார்ச்சத்து வைட்டமின் சி போன்றவை உள்ளன. குறைந்த அடர்த்தி கொழுப்பு புரதம்  மற்றும் கொழுப்பு அமிலங்களையும் குறைக்க உதவுகிறது. 
 
கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம், இருமல், தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்குத் தீர்வு தருகின்றன.கொய்யா இலையின் சாறு எடுத்து அதோடு தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வருவதால் விரைவில் எடை குறைவதை காணலாம்.
 
கொய்யா இலையைக் கொதிக்க வைக்கும்போது சிறிதளவு துளசியும், இஞ்சியையும் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால், மூச்சுக்குழாய் அலர்ஜி நீங்கும். வயிறு ஒவ்வாமையை உண்டாக்கக்கூடிய உணவை சாப்பிட்டுவிடுவதால் செரிமானம் ஆகாமல் சிலர் சிரமப்படுவதுண்டு.
 
செரிமான கோளாறு உள்ளவர்கள் ஐந்து கொய்யா இலையையும் கொஞ்சம் சீரகமும் சேர்த்து கொதிக்க வைத்துப் பருகினால் உடனடியாக வயிறு உப்புசம் குறைந்து உணவு சீரணமடையும். உணவு ஒவ்வாமையால் ஏற்படக்கூடிய பாதிப்பும் குறையும்.
 
கொய்யா இலைகளின் சாற்றை அருந்தும்போது நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. இது நீரிழிவு நோயாளிகளின் இன்சுலின் சுரப்பியினைத் தூண்டி சுக்ரோஸ் மற்றும் மால்டோஸ் உள்ளீர்ப்பை தடுக்கிறது, மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்துகிறது.
 
தலையில் ஏற்படும் அரிப்பிற்கு கொய்யா இலையின் சாற்றினை வாரம் ஒருமுறை ஸ்கால்ப்பில் படும்படி தடவி ஊறவைத்து அலச வேண்டும். கொய்யா இலையின்  சாற்றினை வாரம் ஒரு முறை தலையில் தடவி ஊற வைத்து அலச வேண்டும். இப்படி செய்து வந்தால், பேன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

தொடர்புடைய செய்திகள்

சரியான தூக்கம் இல்லையென்றால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?

புத்தக விமர்சனம்: Western Media Narratives on India: From Gandhi to Modi! ஒரு விமர்சனப் பார்வை

கோடை காலத்தில் போதுமான தண்ணீர் குடிக்காவிட்டால் என்னென்ன பிரச்சனைகள் வரும்?

ஆஸ்துமா நோய்க்கான அறிகுறிகள், சிகிச்சைகள் என்னென்ன?

முலாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments