Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேற்றான் கொட்டையின் அற்புத மருத்துவ பயன்கள் !!

Webdunia
புதன், 6 ஏப்ரல் 2022 (12:50 IST)
கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டதும், உஷ்ணத்தை குறைக்க கூடியதும், ரத்த ஓட்டத்தை சீராக்க வல்லது.


அடிக்கடி சிறுநீர் கழித்தலை தடுப்பதும், பலவீனமான உடலை தேற்றக் கூடியதும், பால்வினை நோயால் ஏற்படும் புண்களை குணப்படுத்த கூடியதுமான தேத்தான் கொட்டை சூரணம் பல மருத்துவகுணங்களை கொண்டது.

அடிக்கடி சிறுநீர் கழிப்பதால் உடல் பலவீனம் அடைவதுடன் தூக்கம் கெட்டுவிடும். இந்நிலையில், தேத்தான் கொட்டை சூரணத்தை தேனீராக்கி பால் சேர்த்து குடிப்பதால் இப்பிரச்னை சரியாகும்.

உடலுக்கு பலத்தை கொடுக்கும் தேத்தான் கொட்டையானது, உள் உறுப்புகளில் ஏற்படும் அழற்சியை போக்கும்.  உஷ்ணத்தை குறைக்கும். கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டது. ரத்த நாளங்களில் படிந்து மாரடைப்பை ஏற்படுத்தும் கொழுப்பை கரைக்கும். ரத்த ஓட்டத்தை சீர்செய்யும்.

லேகியமாக செய்து காலை, மாலை சாப்பிடுவதன் மூலம் உடல் எடை கூடுவதுடன் பலம் அதிகரிக்கும். பால்வினை நோய்க்கு தீர்வாக அமைகிறது. சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது.

சிறுநீரக கோளாறுகளை சரி செய்கிறது. இருமலை தணிக்கும் தன்மை கொண்டது. ரத்த அழுத்ததை குறைக்கிறது.  பால்வினையால் ஏற்படும் புண்களை ஆற்றக் கூடியது. அடிக்கடி சிறுநீர் கழித்தல், ரத்தம் கலந்து வெளியேறுதலை தடுக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அளவுக்கு அதிகமாக குடித்தால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகள்..!

தொண்டை வலிக்கு சில எளிய வீட்டு வைத்தியங்கள்!

சர்வதேச மீள் உருவாக்க மருத்துவம்! ரீஜென் 2025 மாநாடு! - பிளாஸ்மா சிகிச்சைக்கு வழிகாட்டுதல்கள்!

தீக்காயம் ஏற்பட்டால் உடனே செய்ய வேண்டியது என்ன? செய்ய கூடாதது என்ன?

ABC ஜூஸின் முக்கிய நன்மைகள். தினமும் அருந்துவதால் கிடைக்கும் முக்கியப் பயன்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments