Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொடுதலை மூலிகையின் அற்புத மருத்துவ பயன்கள் !!

Webdunia
வியாழன், 10 பிப்ரவரி 2022 (10:32 IST)
தலைப்பொடுகைக் குணமாக்கும் சிறப்பு கொண்டதாலேயே பொடுதலை என்கிற பெயர் இந்த தாவரத்திற்கு ஏற்பட்டது. பொடுதலை கீரை சிறுசெடி வகையைச் சார்ந்தது. தரையோடு கிடைமட்டமாக படர்ந்து வளரும்.


ரம்பம் போன்ற பற்கள் கொண்ட சொர சொரப்பான கரண்டி வடிவ இலைகளையும், பூங்கொத்துகளையும் உடையது. இந்த கீரையின் இலை, வேர் மிகுந்த மருத்துவ பயன் உடையது. பொடுதலை கீரை துவர்ப்புச் சுவையை கொண்டது.

பொடுதலை கீரையை சுத்தம் செய்து அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நெய் விட்டு வதக்கி சட்னி போல செய்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.

வறட்டு இருமலால் பாதிக்கபட்டவர்கள் பொடுதலை இலையை சுத்தம் செய்து அதனுடன் பாசிப்பருப்பு கலந்து வேகவைத்து கூட்டு செய்து  சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்.

பொடுதலை இலையை நன்கு மைபோல் அரைத்து அக்கி கொப்புளங்கள் மீது தடவினால் எரிச்சல் நீங்குவதுடன் கொப்புளங்கள் உடைந்து புண்கள் விரைவில் ஆறும்.

பொடுதலை இலைகளை அரைத்து தலைவலி உள்ள பகுதியில் பற்று போல போட்டால் ஒற்றைத் தலைவலி விரைவில் நீங்கும். பொடுதலை கீரையை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் கருப்பை வலுப்பெறும்.

வெள்ளைப்படுதல் குணமாக பொடுதலை இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் காலையில் 1 தேக்கரண்டி பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வரவேண்டும். அப்படி சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் நோய் குணமாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போன் அதிகம் பயன்படுத்தினால் முகப்பரு வருமா? அதிர்ச்சி தகவல்..!

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

அடுத்த கட்டுரையில்
Show comments