Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்க்கரை நோயாளிகளின் கால்களில் ஏற்படும் எரிச்சலை போக்கும் பாகற்காய் இலை...!

Webdunia
பாகற்காயில் வைட்டமின் பி3, வைட்டமின் பி5, வைட்டமின் பி6 போன்ற வைட்டமின்களும் இரும்பு, துத்தநாகம், பொட்டாசியம், மாங்கனீசு மற்றும் மக்னீசியம் போன்ற தாதுக்கள் இருக்கிறது.
பாகற்காயில் வைட்டமின் சி மிகுதியாக இருப்பதால் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாக உள்ளது. உடலின் வளர்சிதை மாற்றத்தை சரிசெய்யும் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் பாகற்காயில் நிறைந்துள்ளன.
 
மாலைக்கண் நோய் உள்ளவர்கள் பாகல் இலைச் சாற்றுடன் சிறிதளவு மிளகை சேர்த்து அரைத்து கண்ணைச் சுற்றி பற்றிட மாலைக்கண்  குறைபாடு படிப்படியாக நீங்கும்.
 
நோயை எதிர்கொள்ள சிறந்த மருந்தாக பாகற்காய் சாறு பயன்படுகிறது. பாகற்காயில் உள்ள ஒருவகை வேதிப்பொருள் இன்சுலின் போல செயல்பட்டு, இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.
 
உடலின் செரிமான மண்டலத்தை நன்றாகத் தூண்டி, நல்ல செரிமானத்தை உண்டாக்குகிறது. இதனால் உடலுக்குத் தேவையான சத்துக்கள்  உறிஞ்சப்பட்டு, வேகமாக உடல் எடையை குறைக்கிறது.
காலையில் வெறும் வயிற்றில் பாகல் இலைச்சாற்றை 30மிலி அளவில் குடித்துவர வயிற்றுப் பூச்சி கழிந்து வெளியேறும். பாகல் வற்றலை  வறுத்து சாப்பிட மூலம், காமாலை நீங்கும். இதை உண்ணும் காலத்தில் அசைவ உணவை முற்றிலும் விலக்கவேண்டும்.
 
பாகல் இலைச்சாற்றை வாரம் ஒரு முறை 100மிலி குடித்து வந்தால் சிறுநீர் சர்க்கரையின் அளவு குறையும். சிலருக்கு உள்ளங்கால்களில் காலையில் எப்பொழுதும் எரிச்சல் இருக்கும். இவர்கள் பாகல் இலைச் சாற்றை பிழிந்து இரவு படுக்கப்போகும்போது உள்ளங்கால்களில் தடவி  வர எரிச்சல் நீங்கும்.
 
உடலில் ஏற்படும் கட்டி மற்றும் கண் நோய்களுக்கு சிறந்த மருந்தாய் பாகற்காய் விளங்குகிறது. பசுமையான பாகற்காய்கள், ஆஸ்துமா, சளிப் பிடித்தல், இருமல் போன்றவற்றைத் தீர்ப்பதில் மிகச்சிறந்த நிவாரணியாகப் பயன்படுகின்றன.
 
பாகற்காயை சாப்பிட்டு வந்தால், சருமத்தில் உள்ள பருக்கள், கருப்பு தழும்புகள், ஆழமான சருமத் தொற்றுகள் ஆகியவை நீங்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments