Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சில பயனுள்ள இயற்கை முறையிலான வைத்திய குறிப்புகள் !!

Webdunia
சனி, 5 பிப்ரவரி 2022 (18:58 IST)
சிறு பாத்திரத்தில் நீர் ஊற்றி ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை போட்டுக் கலக்கி பாத்திரத்தை அடுப்பில் சூடேற்ற ஆவி வெளிவரும். வெளிவரும் ஆவியை பிடித்தால் தலைவலி குணமாகும்.


இஞ்சியை இடித்துச் சாறு எடுத்து சூடாக்கி தலையில் நெற்றியில் பற்று போட குணமாகும்.

ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறுதுண்டு சுக்கு 2 இலவங்கம் சேர்த்து மைபோல அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

ஒரு கரண்டியில் நெருப்புத் துண்டுகளை எடுத்து அதன் மீது சிறிது சாம்பிராணி, மஞ்சள் தூள் ஆகியவைகளை போட்டுப் புகை வரவழைத்து, அந்தப்புகையை மூக்கினால் உள்ளிழுத்தால் சளித் தொல்லை நீங்கும்.

கரிசலாங்கண்ணி செடியை வேருடன் பிடுங்கி அலசி நிழலில் உலர்த்தி பொடியாக்கி 100 கிராம் வறுத்து 5 கிராம் தினமும் காலை, மாலை தொடர்ந்து 3 மாதம் சாப்பிட சுபம் நீங்கி உடல் தோறும். மருந்து சாப்பிடும் காலத்தில் புலால் சாப்பிடக் கூடாது.

இளைப்பு, இருமல் குணமாக: விஷ்ணுகிரந்தி பொடியை வெந்நீரில் கலந்து குடிக்க இளைப்பு, இருமல் குணமாகும். தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் அல்லது பாலில் சாப்பிட தும்மல் நிற்கும்.

சுண்டைக்காயை வத்தல் செய்து, அதை மிக்ஸியில் அரைத்து பவுடரை சாம்பார், குருமா போன்ற எல்லா குழம்புகளிலும் 1/2 கரண்டி மசால் பவுடருடன் சேர்த்து சாப்பிட சளிகபம் இருந்தாலும் குணமாகும்.

செம்பருத்தி பூவை எடுத்து சுத்தம் செய்து மைய அரைத்து உருண்டையாக எடுத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர பூரணகுணம் கிடைக்கும்.

நல்லெண்ணெய்யில் தும்பை பூவை போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிகளவு எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்..!

குழந்தைகளுக்கு பிஸ்கட் சாப்பிட கொடுப்பது நல்லதா?

சுண்டல் அவித்து சாப்பிடுவதால் கிடைக்கும் வைட்டமின்கள்.. ஆரோக்கியமான ஸ்னாக்ஸ்..!

பலாப்பழத்தில் உள்ள வைட்டமின் என்னென்ன?

பாகற்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments