பற்களில் ஏற்படும் கறைகளை போக்க உதவும் சில குறிப்புகள் !!

Webdunia
வெள்ளி, 29 ஜூலை 2022 (18:02 IST)
பற்கள் வெள்ளையாக இருக்க வேண்டுமானால், முதலில் அதிக அளவில் காபி அல்லது டீ குடிப்பது, புகைப்பிடிப்பது, போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இதனால் பற்களில் கறைகள் படிவதைத் தவிர்க்கலாம்.


இரண்டு அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை பல் துலக்கும் பிரஷ்ஷை மாற்ற வேண்டும். இல்லாவிட்டால், பிரஷ்களில் உள்ள பாக்டீரியாவானது வாயில் நுழைந்து, கடுமையான துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.

பற்களை பாதுகாக்க பளிச்சிட செய்ய தினமும் காலை மற்றும் இரவில் வாய்யை சுத்தம் செய்ய வேண்டும். வாயில் இருக்கும் துர்நாற்றம் வரவும், பற்களில் கறைகள் அகலாமல் இருக்கும், நாக்கில் உள்ள அழுக்குகளும் முக்கிய காரணமாகும். ஆகவே தவறாமல் வாய்யை சுத்தம் செய்ய வேண்டும்.

பற்களை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுப் பொருட்களான ஆப்பிள், கேரட் போன்றவற்றை தினமும் தவறாமல் சாப்பிட்டு வந்தால், பற்களில் கறைகள் படிவதைத் தவிர்க்கலாம்.

ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் கலந்து, அந்நீரால் வாயை கொப்பளிக்க வேண்டும். அதில் உள்ள ஆசிட்டுகளானது பற்களில் தங்கியுள்ள கறைகளை நீக்குவதோடு, வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து பற்களை வெண்மையாக்க உதவும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும் பாலக் கீரை! அதிசய பலன்கள் தரும் எளிய சமையல் முறை

முட்டையின் வெள்ளைக்கருவில் இருக்கும் வைட்டமின்கள் என்னென்ன?

வாரம் ஒருமுறை கோவைக்காய் சாப்பிடுங்கள்.. ஏராளமான நன்மைகள்..!

முட்டைகோஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

கறிவேப்பிலை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments