Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பற்களை ஆரோக்கியமாக பாதுகாக்கும் சில எளிய வழிமுறைகள்!

Webdunia
உண்ணும் உணவில் ஒருசில மாற்றங்களுடன், அன்றாடம் ஒருசில பொருட்களைக் கொண்டு பற்களைப் பராமரித்து வந்தால், சொத்தைத் தடுக்கலாம். எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து பற்களை தேய்த்து 2 நிமிடம் ஊற வைத்து, பின்பு பற்களை  நன்கு கழுவ வேண்டும். எலுமிச்சையில் இயற்கையாகவே உள்ள ப்ளீச்சிங் தன்மையாகும்.

 
ஆயில் புல்லிங் என்பது தினமும் காலையில் நல்லெண்ணெயை வாயில் ஊற்றி, 10 நிமிடம் வாயினுள் வைத்து கொப்பளிக்க  வேண்டும். இப்படி செய்வதால், வாயில் உள்ள அனைத்து பாக்டீரியாக்களும் வெளியேறி, வாயின் ஆரோக்கியம் மேம்படும். குறிப்பாக இப்படி தினமும் செய்து வந்தால், சொத்தைப் பற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.
 
காலை, இரவு என்று தினமும் இரண்டு வேளை பல் துலக்குவது அவசியம். இரவு படுக்கும்போது உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்துவிட்டுப் படுப்பது பற்களுக்கு நல்ல பாதுகாப்பைத் தரும்.
 
சொத்தைப் பற்கள் உருவாவதற்கு போதிய கனிமச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்ணாமல் இருப்பது மற்றும் கொழுப்பில்  கரையாத வைட்டமின்களான ஏ, டி, ஈ, கே போன்றவற்றின் குறைபாடு மற்றும் சில ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருப்பது தான் காரணம். இதற்கு சரியான தீர்வு, நல்ல சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை அன்றாடம் உட்கொண்டு வர வேண்டும்.
 
கார்போஹைட்ரேட்கள், சர்க்கரைப் பொருட்கள் போன்றவை பற்சிதைவைத் தூண்டும் காரணிகள். சுத்திரிக்கரிக்கப்பட்ட சர்க்கரை கலந்த உணவுகளை உட்கொண்டால், கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகரித்து, அதனால் பற்களில் சொத்தையும்  அதிகரிக்கும். உணவுகளில் இனிப்பு வேண்டுமானால், தேனைக் கலந்து கொள்ளலாம்.
 
வைட்டமின் சி, வைட்டமின் டி, கால்சியம், பாஸ்பரஸ் சத்துகள் மிகுந்த மீன் எண்ணெய், திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, எலுமிச்சை, நெல்லிக்காய், பச்சையிலைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள் முதலியவற்றையும், புரதச்சத்து மிகுந்த பால்,  முட்டை, இறைச்சி, பயறு, பருப்பு முதலியவற்றையும் தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால், பல் ஈறுகளும் எனாமலும்  நல்ல வளர்ச்சி பெறும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போன் அதிகம் பயன்படுத்தினால் முகப்பரு வருமா? அதிர்ச்சி தகவல்..!

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

அடுத்த கட்டுரையில்
Show comments