Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சில அற்புத பயன்கள் நிறைந்த மருத்துவ குறிப்புகள்....!

Webdunia
வேர்க்கடலை: வேர்க்கடலையில் ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் உடம்பில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்கிவிடும். வேர்க்கடலை சாப்பிடுவதால் உடம்பில் உற்பத்தியாகும் நைட்ரிக் அமிலம் ரத்த குழாயை விரிவடையச் செய்கிறது இதனால் ரத்தம் சீராக இருப்பதோடு இரத்த அழுத்தமும்  குறையும்.
பப்பாளி: சிறுநீர் கல்லடைப்புக்கு அருமருந்து. நரம்புகள் பலமாகும். ஆண்மை விருத்தியாகும். ஞாபக சக்தி மேம்படும். மாதவிடாய் கோளாறுகள் நீங்கும். ரத்தக் கொழுப்பைக் குறைக்கும் மற்றும் ஆர்த்ரிடிஸ் நோய்க்கு சிறந்தது இதில் வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோடின் உள்ளது இது  கண்களுக்கு நல்லது.
 
நாவல்பழம்: நீரிழிவுக்கு அருமருந்து வைட்டமின் பி1 பி2 பி6 ஆகிய சத்துக்கள் நிறைந்த பழம். கல்லீரல் கோளாறு நீங்கும். குடல் புண்ணை  அகற்றும்.
நெல்லிக்காய்: நெல்லிக்காய தினமும் காலையில் மென்று சாப்பிட்டு வந்தால் நாளடைவில் தைராய்டு கோளாறுகளில் இருந்து விடுதலை  பெறலாம்.
 
கேரட்: மாலைக்கண் நோயை தடுக்கும் கேரட்டில் வைட்டமின் ஏ இருக்கிறது அதனால் கண் பார்வைக்கு மிகவும் நல்லது. குடல் புண்கள் வராமல் தடுக்கும். நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எலும்பு பற்கள் பலப்படும். தலைமுடி உதிர்வதை தடுக்கும்.
 
முள்ளங்கி: உடலில் உள்ள கழிவுகளை நீக்கும். புற்றுநோய் செல்கள் உருவாகாமல் தடுக்கும். காமாலையை குணப்படுத்தும். சிறுநீரகத்தை சரிசெய்யும். உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். மூலநோய்க்கு மிகச்சிறந்த மருந்தாகும்.
 
பூண்டு: உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும், வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு கேன்சர் செல்கள்  உருவாகாமலும் தடுக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments