Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரியான வழியில் எடையை குறைக்க சில அற்புத வழிகள் !!

Webdunia
சீரான இடைவேளைகளில், குறைந்த அளவில் சாப்பிடலாம். ஒருபோதும் பட்டினி இருக்கவேண்டாம். முக்கியமாக, காலை உணவை தவிர்த்தால், அதிகப் பசியெடுத்து, அடுத்த வேளை உணவை ஒரு பிடி பிடிக்க நேரிடும்.

தினமும் நடைபயிற்சி செய்யுங்கள். இது உடல்பயிற்சியை விட சிறந்தது. நடைபயிற்சியும் யோகாவும் ஒன்று.
 
தினமும் இரண்டிலிருந்து மூன்று லிட்டர் வரை தண்ணீர் அருந்தலாம். அசைவத்தில் மீன், தோல் நீக்கப்பட்ட சிக்கன், முட்டையின் வெள்ளைக் கரு ஆகியவற்றை வேகவைத்து சாப்பிடலாம். கிரேவி வேண்டாம்.
 
தின்பண்டங்களுக்கு பதிலாக தினமும் மூன்று வகை பழங்கள் சாப்பிடுங்கள். அதில் ஒன்று ஆரஞ்ச், சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் வகைப் பழமாக இருக்கட்டும்.
 
அவரை, கொத்தவரை, பீன்ஸ், கேரட், முட்டைகோஸ், காலி ப்ளவர், முருங்கைக்காய், சௌ சௌ, பீர்க்கங்காய், புடலங்காய், சுரைக்காய், நூல்கோல், அத்திக்காய், பரங்கிக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ, பூசணிக்காய், வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளில் ஏதேனும் ஒன்றையாவது தினமும் உணவில் இரண்டு கப் (400 கிராம்) சேருங்கள்.
 
உருளை, சேனை போன்ற கிழங்கு வகைகளை தவிர்த்து விடுதல் நல்லது. அதிக கொழுப்பில்லாத பாலில் (அதாவது 3% அளவே கொழுப்பு சத்துள்ள ‘டோன்டு’ பாலில்) தயாரித்த காபி, டீ, தயிர் சாப்பிடலாம்.
 
நல்லெண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை ஒரு நாளைக்கு மூன்று டீஸ்பூன் உபயோகிக்கவும்.
 
வாரத்தில் மூன்று நாட்கள் கீரையும், தட்டாம்பயறு, பச்சைப்பயிறு, கறுப்பு சுண்டல் கடலை, கொள்ளுப்பயறு போன்ற பயறு வகைகளும் அவசியம் சேருங்கள். அதோடு, நார்ச்சத்துள்ள கைக்குத்தல் அரிசி, கைக்குத்தல் அவல், முழு கோதுமை, கோதுமை ரவை, கேழ்வரகு, கம்பு போன்ற தானியங்களையும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடற்பயிற்சி செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய 6 வழிமுறைகள்..!

வைட்டமின் டி குறைபாட்டால் எலும்புகள் பிரச்சனை ஏற்படுமா?

இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?

பாம்பு போல நாக்கை வெட்டி டாட்டூ: இதனால் என்ன ஆபத்து?

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் சைனஸ் பிரச்சனை.. தீர்வு என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments