Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சித்த மருத்துவத்தில் நோய்களுக்கான தீர்வுகள்

சித்த மருத்துவத்தில் நோய்களுக்கான தீர்வுகள்
, வியாழன், 21 ஜனவரி 2016 (12:16 IST)
சித்த மருத்துவம் என்பது தமிழ் மருத்துவ முறையாகும். சித்த மருத்துவம் எப்போது தோன்றியது என்று வரையறுத்துக் கூறவியலாது. அது பாரம்பரிய மரபு முறைப்படி பரவி வந்துள்ளது.


 
 
1. குப்பைமேனி இலை 1 கைப்பிடி, 1 கரண்டி சீரகம் சேர்த்து அரைத்து பசும்பாலில் சாப்பிட்டால் ஒரே வேளையில் கூட ரத்தபோக்கு நின்று விடும்.
 
2. சர்க்கரை நோய் குணமாக, வேப்பம்பூ, நெல்லிக்காய் பவுடர், துளசிபவுடர், நாவல் கொட்டை பவுடர் சேர்த்து தினசரி 1/2 ஸ்பூன் சாப்பிட்டு வர 3 மாதத்தில் நீரழிவு குணமாகும்.
 
3. வாய்ப்புண் குணமாக, நெல்லி இலைகளை அவித்து வடிகட்டி அந்த நீரினால் வாய் கொப்பளித்தால் வாய்ப்புண் வெகு சீக்கிரம் குணமாகும்.
 
4. சீதபேதி குணமாக, வாழைப்பூவை கன்னன் நீக்கி, அவித்து கசக்கி சாறு எடுத்து காலையில் 15 மில்லி சாப்பிட சீதபேதி குணமாகும்.
 
5. மூக்கு சம்பந்தமான நோய் குணமாக, நாயுறுவி செடி விதைகளை பொடி செய்து உட்கொண்டால் மூக்கு சம்பந்தமான நோய் குணமாகும்.
 
6. வாயுவை கட்டுப்படுத்த, சுக்கான் கீரையை பருப்புடன் சேர்த்து உண்டுவர வயிற்றிலுள்ள வாயுவை கட்டுப்படுத்தும். அதிகபடியான அமிலத்தை சீர்செய்து வயிற்றுபுண் வராமல் தடுக்கும். தேகத்தில் ஏற்படும் பித்த ஊறல், தழும்புகள் மறையும்.
 
7. வயிற்று வலி குணமாக, வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்றுவலி தீரும்.
 
8. பேதி குணமாக, அவரை இலைசாறை தயிருடன் சாப்பிட பேதி நிற்கும்.
 
9. காதில் சீழ்வடிதல் குணமாக, முடக்கத்தான் இஅலிசாறில், சீரக பொடியை போட்டு ஊற வைத்து காதில் விட்டு வந்தால் வலி தீரும், சீழ்வடிதலும் நிற்கும்.
 
10. காதுவலி குணமாக, நல்லெண்ணையில், வெள்ளைப்பூடு, பெருங்காயம், கற்போரம் போட்டு காய்ச்சி தினசரி 3 வேளை இரண்டு சொட்டு காதில் விடுவர காதுவலி குணமாகும்.

Share this Story:

Follow Webdunia tamil