Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினமும் கொண்டைக்கடலை சாப்பிட்டு வருவதால் இத்தனை நன்மைகளா...?

Webdunia
கொண்டைக்கடலையில் அதிக அளவு புரதச்சத்துக்கள் நிறைந்துள்ளது. முடி, நகம் மற்றும் உடல் வளர்ச்சிக்கு புரோட்டீன் சத்து மிக முக்கியம். எனவே தினமும் 100 கிராம் கொண்டைக் கடலையினை உட்கொண்டு வரவது நல்லது.

கொண்டைக் கடலையில் அதிக அளவு கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் உள்ளது. உங்கள் உணவுகளில் உள்ள கால்சியம் சத்தினை உரிய மெக்னீசியம் சாது மிகவும் முக்கிய பங்கினை வகிக்கின்றது. 
 
கொண்டைக் கடலை எலும்பு மற்றும் பற்களின் வலிமையினை அதிகரிக்கின்றது. எனவே உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள் தினமும் கொண்டைக் கடலையினை உட்கொண்டு வந்தால் நிறைய பயன் பெறலாம்.
 
கொண்டைக் கடலையில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. 100 கிராம் கொண்டைக் கடலையில் கிட்டத்தட்ட 19 கிராம் நார்சத்து நிறைந்துள்ளது. உடல் எடையினை குறைக்க நார்சத்து முக்கியம். தினமும் நார்சத்து உணவினை உண்டு வருபவர்களுக்கு மலசிக்கல் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க உதவும்.
 
கொண்டைக்கடலையில் அதிக அளவு பொட்டாசியம் நிறைந்துள்ளது. உங்கள் இரத்த அழுத்தத்தினை கட்டுக்குள் வைக்க பொட்டாசியம் சாது மிக மிக முக்கியம். உயர் இரத்த அழுத்தம் உடையவர்கள் தினமும் கொண்டைக்கடலையை ஒரு கைப்பிடி உண்டு வந்தால் அவர்களின் இரத்த அழுத்தம் குறைந்து ஆரோக்கியம் மேம்படும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அவித்த முட்டையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..!

நெய் சுத்தமானதுதானா என்பதை எப்படி கண்டுபிடிப்பது? - எளிய வழிமுறைகள்!

திராட்சை பழத்தில் உள்ள வைட்டமின் சத்துக்கள் என்னென்ன?

டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை நடத்தும் கல்பவிருக்‌ஷா வருடாந்திர கண் மருத்துவவியல் கல்வி பயிலரங்கின் 17-வது பதிப்பு!

சிறுகீரை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments