Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதால் இத்தனை நன்மைகளா...!!

Banana flower
Webdunia
வெள்ளி, 3 ஜூன் 2022 (13:15 IST)
வயிற்று புண்களை குணமாக்கும் சக்தி கொண்டது வாழைப்பூ. வாழைப்பூவை வேக வைத்தோ அல்லது பொரியல் செய்தோ அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும். அஜீரணம் கோளாறுகள் சரியாகும்.


வாழைப்பூவானது மூலநோயின் பாதிப்பினால் மலத்துடன் இரத்தம் வெளியேறுதல், உள்மூலம், வெளிமூலப் புண்கள், மூலக்கடுப்பு, இரத்த மூலம் போன்றவற்றைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது. சீதபேதியையும் கட்டுப்படுத்தும். வாய்ப் புண்ணைப் போக்கி வாய் நாற்றத்தையும் நீக்கும்.

பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள், மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் அதிக இரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

உடல் சூடு உள்ளவர்கள் வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்து கடைந்து அதனுடன் நெய் சேர்த்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறையும்.

வாழைப்பூவை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். இதனால் இரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, இரத்தம் வேகமாகச் செல்லும்.

வாழைப்பூவானது இரத்த நாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து இரத்தத்தை சுத்தமாக்கும். இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.

இரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரையை கரைக்க வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை அதிகம் உதவுகிறது. இதனால் இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூத்த குடிமக்களுக்கு பின்ஹோல் பியூப்பிலோபிளாஸ்டி மூலம் சிகிச்சை! - டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை!

`அல்சைமர்' எனும் மறதிநோய்.. இந்த நோயை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

வாய்வு வெளியேறும் போது சத்தம் வருவது ஏன்?

வெயில் காலத்திற்கேற்ற நன்னாரி சர்பத்.. சர்க்கரை நோயாளிகள் குடிக்கலாமா?

கேனில் அடைக்கப்பட்ட பானங்கள் குடித்தால் புற்றுநோய் வருமா? அதிர்ச்சி தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments