Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உணவில் அடிக்கடி தூதுவளை சேர்த்துக்கொள்வதால் இத்தனை அற்புத பலன்களா...!!

Webdunia
செவ்வாய், 21 ஜூன் 2022 (10:40 IST)
தூதுவளையை உணவில் தேவையான அளவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், உடல் வலுவடைந்து நரம்பு சம்பந்த பிரச்சனை நீங்கும். ஆக இவர்களின் ஆண்மைக் குறைபாடு தீரும்.


தூதுவளை கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நல்ல தீர்வாகும். தூதுவளை சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் தீரும். கண் வலி சரியாகி விடும். மேலும் கண் பார்வை குறைபாடுகள் நீங்கி வலிமை அடையும்.

இரத்தத்திலுள்ள சிவப்பு மற்றும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சரியான அளவில் இருக்க வேண்டும். இந்த எண்ணிக்கை குறைந்தால் அவர்களுக்கு இரத்த சோகை நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த இரத்த சோகை பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள தூதுவளை உதவுகிறது.

தூதுவளையில் கால்சியம் சத்து அதிகளவு காணப்படுகின்றது. இதனை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வதன் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்களின் எலும்புகள் மற்றும் பற்கள் பலமடையும். பெண்களுக்கு ஏற்படும் முதுகு வலி, இடுப்பு வலி போன்ற தொல்லைகள் நீங்கும்.

தூதுவளை செரிமான சம்பந்தமான கோளாறுகளை தீர்த்துவிடும். இது தூதுவளையின் மற்றொரு சிறப்பு. மேலும் ஜீரண சக்தி அதிகரிக்கும். குழந்தைகளுக்கு அவ்வப்போது துவையல் செய்து தரலாம்.

தூதுவளையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் இயற்கையாகவே எதிர்ப்புச் சக்தியைப் பெற்றுவிடும். அதனால் பல்வேறு தொற்று வியாதிகள் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முருங்கைக்கீரையில் உள்ள சத்துக்கள் என்னென்ன?

அரைக்கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!

அதிகளவு எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்..!

குழந்தைகளுக்கு பிஸ்கட் சாப்பிட கொடுப்பது நல்லதா?

சுண்டல் அவித்து சாப்பிடுவதால் கிடைக்கும் வைட்டமின்கள்.. ஆரோக்கியமான ஸ்னாக்ஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments