Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொடுகு பிரச்சனைகளை போக்கி தலைமுடி வளர உதவும் சின்ன வெங்காயம் !!

Webdunia
வெள்ளி, 29 ஜூலை 2022 (18:56 IST)
8 சிறிய வெங்காயம், ஒரு ஸ்பூன் காற்றாழை ஜெல் மற்றும் வல்லாரை பொடி ஒரு ஸ்பூன் ஆகியவற்றை மிக்சியில் பேஸ்ட்டு போல் அரைத்து அதனை தலையில் அப்ளை செய்ய வேண்டும்.


சிறிது நேரம் கழித்து நன்கு அலச வேண்டும். இதனை வாரம் ஒரு முறை ட்ரை செய்தால் முன் நெற்றியில் முடி வளர ஆரம்பிக்கும். மேலும் கால்சியம், விட்டமின் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுங்கள்.

ஆலிவ் ஆயிலை 15 நிமிடம் தலையில் மசாஜ் செய்து, 10 நிமிடம் கழித்து மிதமான சுடுநீரில் தலைக்கு குளித்தால் தலை முடி நன்றாக வளரும்.

சின்ன வெங்காயத்தை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, சாறு வெளிவந்த பின், வடிகட்டி ஸ்கால்ப்பில் மசாஜ் செய்ய வேண்டும்.

வெங்காய சாறு கலந்த தேங்காய் எண்ணெய்யை லேசாக சூடாக்கி, ஆறிய பின் தலையில் தடவி ஊறவைத்து, குறித்தால் வேர் வலுப்படும்.

அதிக வெப்பம் தலைமுடியை பாதிக்கும். ஆகையால் முடிந்த வரை ப்ளோ டிலையர், ஃப்ளாட் ஐயன் அல்லது கர்லிங் ஐயன் ஆகியவற்றை தவிர்ப்பது சிறந்தது.

தேங்காய், ஆலிவ், அவகடோ எண்ணெய் ஆகியவை உங்கள் தலையைக் குளிர்ச்சியாக வைத்திருக்கும். எனவே தலை முடியின் வேரிலிருந்து எண்ணெய்யை தேய்க்கவும். அதிக கெமிக்கல் இல்லாத உபயோகிப்பது நல்லது.

தொடர்புடைய செய்திகள்

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments