Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோல் நோய்களுக்கு அற்புத தீர்வு தரும் கீழாநெல்லி...!

Webdunia
சிறுநீர்தாரை எரிச்சல் குணமாகும். கீழாநெல்லி அற்புதமான மருந்தாகி ஈரலை பலப்படுத்தி ஈரல் நோய்க்களை போக்குகிறது. மஞ்சள்  காமாலையால் உடல் சோர்வு, வாந்தி, குமட்டல், பசியின்மை ஏற்படும். இது அதிகரிக்கும்போது ஈரல் வீக்கம் ஏற்படும். இப்பிரச்னையை  சரிசெய்யும் மருந்தாகிறது.
கீழாநெல்லி அரைத்து பசும்பாலுடன் கலந்து காலை, மாலை ஆகிய இருவேளை தொடர்ந்து 3 நாட்கள் உட்கொண்டு வந்தால் உடல் சூடு  தணிந்து குளிர்ச்சி பெறும். விஷக்கிருமிகளால் ஏற்படும் தொற்று நோய்களை குணப்படுத்துவதற்கான மருந்தாகவும் இதை பயன்படுத்தலாம்.
 
கீழாநெல்லி இலையுடன் சிறிது மஞ்சளைச் சேர்த்து அரைத்து உடலில் தேய்த்து, பதினைந்து நிமிடங்கள் ஊறவிட்டு, குளித்தால் தோல்  நோய்கள் குணமாகும். கீழாநெல்லிச் செடியை நன்றாக அரைத்து சொறி, சிரங்கு, படைகளில் பற்றுப்போட்டால் உடனே குணமாகும்.
 
கீழாநெல்லிச் செடி, கரிசலாங்கண்ணி இலை, தும்பை இலை, சீரகம், பொன்னாங்கண்ணி ஆகியவற்றை சமஅளவு எடுத்து, காய்ச்சிய பசும்பால்விட்டு அரைத்து, கோலிக்குண்டு அளவு காலை, மாலை இருவேளையும் பாலுடன் குடிக்கக் கொடுத்தால் ஏழு நாட்களில் மஞ்சள்  காமாலை குணமாகும்.  
 
கீழாநெல்லியும் மஞ்சளும் சேர்த்து உடலில் தேய்த்து சில நிமிடம் ஊறவிட்டு குளித்து வர தோல் நோய்கள் வராமல் தடுப்பதோடு  வந்தநோய்கள் அனைத்தும் தீரும். மேலும் கீழ்க்காய் நெல்லியை நன்றாக மென்று பல்துலக்கி வர பல்வலி என்பது பக்கத்திலும் அண்டாது.
 
எண்ணெயில் இட்டு காய்ச்சி தலைக்கு போடும்போது குளிர்ச்சி தரும். கண்களில் சிவப்பு தன்மை, எரிச்சலை போக்குகிறது.பார்வை தெளிவாகிறது. கீழாநெல்லி சாறுடன் உப்பு சேர்த்து தோலில் பூசும்போது அரிப்பு தரும் தோல் நோய்கள் சரியாகும். இதன் சாற்றை மஞ்சளுடன் சேர்த்து கலந்து போடும்போது சொரியாசிஸ் சரியாகும். கீழாநெல்லிச் செடியை நன்றாக மென்று பல்துலக்கி வந்தால் பல்வலி குணமாகும்.

தொடர்புடைய செய்திகள்

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments