Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதய நோய்கள் சம்பந்தமான பிரச்சனைகளை தீர்க்கும் எளிய வழிமுறைகள்...!!

Webdunia
நன்றாகப் பழுத்த நெல்லிக்கனியில் ஒன்றை தினசரி தின்றுவிட்டு, தேக்கரண்டி அளவு தேனையும் சாப்பிட வேண்டும். தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால் இருதயம் பலம் பெறும், நல்ல இரத்தம் உண்டாகும்.

இருதய படபடப்பு குறைய: மாசிக்காயைப் பால் விட்டு உரைத்து காலை மாலை இரு வேளையும் ஒன்று அல்லது இரண்டு குன்றி மணி அளவில் நாவிற் தடவி  சுவைத்து வர இருதய பட படப்புத் தீரும்.இதயம் படபடப்பு தீர:-தினசரி ஒவ்வொரு பேரிக்காயை தின்று வர இதய பட படப்புத் தீரும்.
 
இதய நோய்கள் தீர: துளசி இலைச்சாறு,தேன் ஆகிய இரண்டையும் சம அளவில் எடுத்து வெந்நீரில் கலந்து காலை மாலை48 நாட்கள் சாப்பிட்டு வர இதய  நோய்கள் அனைத்தும் நீங்கும்.
 
இதயத்தில் குத்து வலி தீர: கருந்துளசி,செம்பருத்திப் பூ ஆகியனவற்றை சேர்த்துக் கசாயம் செய்து காலை மாலை 10 நாட்கள் குடித்து வர இதய வலி குத்து  ஆகியவை தீரும்.
 
இதய பலம் பெற: அத்திப் பழத்தை காய வைத்துப் பொடியாக்கி 1 கரண்டி வீதம் காலை மாலை இரு வேளயும் சாப்பட்டு வர இதய நோய்கள் தீர்ந்து இதயம் பலம்  பெறும்.
 
இதய நடுக்கம் தீர: திருநீற்றுப் பச்சிலை சாற்றை மூக்கின் வழியாக நுகர்வதால் இதயநடுக்கம் தீரும்.இதயம் பலம் பெற:-மாதுளை சாற்றுடன் தேன் கலந்து காலை  மாலை குடித்து வர ஜீரண சக்தி அதிகரித்து இதயம் பலம் பெறும்.
 
இதய பலகீனம் தீர: செம்பருத்திப் பூவை உலர்த்திப் பொடி செய்து அத்துடன் சம அளவு மருதம் பட்டை பொடியும் சேர்த்து பாலுடன் சேர்த்து அருந்தி வர (காலை  மாலை) இதய பலகீனம் தீரும். மேலும் தினசரி ஆரஞ்சுப் பழம் சாப்பிட்டு வர இதய நோய்கள் தீரும்.
 
மாரடைப்புத் தீர: தான்றிக்காயைப் பொடி செய்து 2 சிட்டிகை அளவு எடுத்து தேனில் கலந்து நாவிற் தடவி வர மாரடைப்புத்தீரும். தொடரும்.இதய நோய்  உள்ளவர்கள் டீ குடிக்கலாம், காபி தவிர்த்தல் நலம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

அடுத்த கட்டுரையில்
Show comments