Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீயினால் ஏற்பட்ட புண்கள் ஆற எளிய குறிப்புகள் !!

Webdunia
சனி, 8 ஜனவரி 2022 (11:14 IST)
உப்பையும், நெய்யையும் சம அளவு எடுத்து குழைத்து சூடுபட்ட இடத்தில் தடவினால் கொப்புளங்கள் குறையும். வேப்பங் கொழுந்தை மோர் விட்டு அரைத்து தீப்பட்ட புண் மீது தடவ தீப்புண் ஆறும்.

அவரை இலைச்சாற்றுடன் மஞ்சள் பொடியை சேர்த்து விளக்கெண்ணெயில் குழப்பி புண்களில் பூசி வந்தால் புண் குறையும்.
 
வேப்பம்பட்டையை எடுத்து நன்கு இடித்து கஷாயமாக்கி காய்ச்சி தீக்காயங்கள் மீது தடவி வந்தால் தீப்புண் குறையும்.
 
நாயுருவி செடியை சுத்தம் செய்து இடித்து பிழிந்து அதை துணியில் வைத்து புண்ணின் மீது கட்டி வந்தால் புண் குறையும்.
 
அவுரி இலையை அரைத்து தீப்புண், தீயினால் ஏற்பட்ட கொப்புளங்கள் மீது பூச தீப்புண் குறையும். தீப்புண்ணின் மீது வெற்றிலையை வைத்து கட்ட தீப்புண் குறையும்.
 
துலுக்க சாமந்தி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து கொப்புளம் மேல் பூசி வந்தால் கொப்புளங்கள் குறையும். பருப்புக் கீரையை நன்கு அரைத்து புண்கள் மீது தடவி வந்தால் தீயினால் ஏற்பட்ட புண்கள் ஆறும்.
 
ம‌ஞ்ச‌ள்,வேப்பிலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து புண்ணில் தடவ புண் ஆறும். உப்பு, மிளகாய் சம எடை எடுத்துத் தூள் செய்து வேப்ப எண்ணெயில் நன்றாக காய்ச்சி தடவ காயம்பட்ட புண் ஆறும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சோம்பை உணவில் சேர்த்து கொள்வதால் ஏற்படும் பயன்கள்..!

பிரைடு ரைஸ் சாப்பிடுவதால் உடல்நலத்திற்கு ஏற்படும் தீங்குகள்..!

உடலுக்கு தேவையான புரதச் சத்துக்கள் உணவுகள் என்னென்ன?

காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகள் என்னென்ன?

ஆஸ்துமா நோய் ஏற்படுவது ஏன்? குணப்படுத்த என்ன வழிகள்?

அடுத்த கட்டுரையில்
Show comments