Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்துமாவினால் ஏற்படும் பிரச்சனைக்கு இயற்கை மருத்துவத்தில் எளிய தீர்வுகள்!

Webdunia
சுவாசப் பிரச்னைதான் ஆஸ்துமா. பெரும்பாலும் இதன் தொடக்கம் அலர்ஜிதான். நுரையீரல் நோய்களும் சுவாச தடையை உருவாக்குகின்றன. சுவாசக் குழல் சுருங்குதல், நுரையீரல் வீங்குதல் போன்ற காரணங்களால் இது உண்டாகிறது. சாதாரண மூச்சு திணறல் தானே என்று கண்டுகொள்ளாமல் விட்டால், நுரையீரல் புற்று நோய்க்கு வழிவகுத்து விடும்.

 
கோரைக்கிழங்கு, சுக்கு, கடுக்காய்த்தோல் சம அளவு எடுத்துப் பொடித்து, வெல்லம் கலந்து இருவேளை உண்ணலாம்.
 
சீந்தில் கொடி, ஆடாதோடை, கண்டங்கத்திரி இவற்றைச் சம அளவு எடுத்து, அரைத்து, அதில் நெய் சேர்த்துக் காய்ச்சித் தினசரி  இருவேளை ஒரு ஸ்பூன் அருந்தலாம்.
 
லவங்கம், சாதிக்காய், திப்பிலி வகைக்கு 1 பங்கு, மிளகு 2 பங்கு, தான்றிக்காய் 3 பங்கு, சுக்கு 4 பங்கு சேர்த்துத் தூள் செய்து, சம அளவு சர்க்கரை சேர்த்து அரை ஸ்பூன் காலை மாலை உண்ணலாம்.
 
இஞ்சிச்சாறு, மாதுளம்பூச்சாறு, தேன் சம அளவு கலந்து 30 மிலி இருவேளை பருகலாம். ஆடாதோடை இலைச்சாறு ஒரு ஸ்பூன்  எடுத்து, தேன் கலந்து அருந்தலாம்.
 
மூக்கிரட்டை வேரை அரைக் கைப்பிடி எடுத்து ஒன்றிரண்டாகச் சிதைத்து, 4 பங்கு நீர் சேர்த்து 1 பங்காக வற்றவைத்து  இருவேளை அருந்தலாம்.
 
சிற்றரத்தை, ஒமம், அக்கரகாரம் சம அளவு எடுத்துப் பொடித்து, அரை ஸ்பூன் எடுத்துத் தேன் கலந்து சாப்பிடலாம். துளசி,  தும்பை இலை சம அளவு எடுத்து, உலர்த்திப் பொடித்து, அதில் அரை ஸ்பூன் தேன் கலந்து உண்ணலாம்.
 
தவிர்க்க வேண்டியவை:
 
அலர்ஜிக்கான காரணத்தை கண்டறிந்து தவிர்ப்பதுடன் உடனடியாக சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டியது அவசியம். புகை பிடிக்கும் பழக்கத்தால் நுரையீரல் பாதிப்பின் காரணமாக ஆஸ்துமா உண்டாக வாய்ப்புள்ளது.
 
கிரீம் பிஸ்கட், குளிர்பானங்கள், கலர் சேர்க்கப்பட்ட உணவுகள், எண்ணெய், கொழுப்பு, வாழைப்பழம், திராட்சை, எலுமிச்சை, வாசனைத் திரவிங்கள், ஜஸ்கிரீம், கத்திரிக்காய், அதிகக் குளிர், பனி, குளிரூட்டப்பட்ட அறை ஆகியன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடர் மழை எதிரொலி: வேகமாக பரவும் இ-கோலி அலர்ஜி நோய்..!

நுரையீரலை சுத்தம் செய்யும் உணவுகள் எவை எவை?

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பனங்கிழங்கு.. சீசனில் வாங்கி சாப்பிடுங்கள்..!

சென்னையில் டிஜிட்டல் கண் ஸ்ட்ரெய்ன் நோயாளி உச்சிமாநாடு! - டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஏற்பாடு!

உடற்பயிற்சி செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய 6 வழிமுறைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments