Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற சேப்பங்கிழங்கு !!

Webdunia
வியாழன், 17 மார்ச் 2022 (10:47 IST)
சத்துக்கள் நிறைந்த சேப்பங்கிழங்கை உட்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தியும் பலப்படும். இதில் உள்ள வைட்டமின் சி ஆன்டி-ஆக்ஸிடன்டாக செயல்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.


மாவுச்சத்து நிறைந்த சேப்பங்கிழங்கில் இரண்டு வகையான கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன, அவை இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கின்றன.

செரிமானம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை உறிஞ்சுவதை மெதுவாக்கும் சேப்பங்கிழங்கை சாப்பிட்ட உடனேயே, அது இரத்த சர்க்கரையின் அதிகரிப்பைத் தடுக்கிறது.

சேம்பில் கலோரிகள் குறைவாக இருப்பதால், உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், இதை அடிக்கடி சமைத்து சாப்பிடலாம்.

ஏராளமான நார்ச்சத்து இருப்பதால்,. இது செரிமானத்தை சரியாக வைக்கும். இதனுடன் வாயு பிரச்சனை, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்றவையும் நீங்கும்.

சேப்பங்கிழங்கு சாப்பிடுவது கண்களின் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். இதில் வைட்டமின் ஏ மற்றும் சி,ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, இவை கண்பார்வையை மேம்படுத்த உதவுகிறது.

சேப்பங்கிழங்கு ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின்கள் சி, ஈ ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இதய நோய்கள், புற்றுநோய் போன்ற தீவிர நோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்பக புற்றுநோய் வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்?

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

அடுத்த கட்டுரையில்
Show comments