Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இத்தனை மருத்துவ குணங்களை கொண்டதா சங்குப்பூ !!

Webdunia
சங்குப்பூ வேர், சிறுநீர்ப்பை நோய்கள், மேகரணம், மாந்தம், காய்ச்சலைக் கட்டுப்படுத்தும். சங்குப்பூ விதை புளிப்பாகவும், மணமுள்ளதாகவும் இருக்கும். உடலுக்கு வலிமை தரும் சர்பத், பான வகைகளில் சங்குப்பூ சேர்க்கப்படுகின்றது.


சங்குப்பூ இலைகள் துவர்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை, சிறுநீர் பெருக்கும்; குடல் புழுக்களைக் கொல்லும்; உடல் வெப்பத்தைத் தணிக்கும்; வாந்தி உண்டாக்கும்; பேதியைத் தூண்டும்; தலை நோய், கண் நோய்கள், மந்தம் ஆகியவற்றையும் கட்டுப்படுத்தும். சங்குப்பூ மலர்ச்சாறு, கல்லீரலை பலப்படுத்தும். தேமல் மற்றும் கரும்புள்ளிகளைக் குணமாக்கும். 

சங்குப்பூ ஏறு கொடி வகையைச் சார்ந்தது.பச்சையான கூட்டிலைகளையும், பளிச்சிடும் நீல நிறமான மலர்களையும் உடையது. தட்டையான காய்களை உடையது.
 
சங்குப்பூ வெள்ளை நிறமான மலர்கள், நீல நிறமான மலர்கள் என இரண்டு வகைகள் பொதுவாக காணப்படும். மேலும் நீல நிறமான அடுக்கிதழ்களால் ஆன மலர்களைக் கொண்ட தாவரங்களும் உண்டு. வெள்ளை பூ பூக்கும் தாவரத்திற்கு மருத்துவ பயன் அதிகமாக உள்ளதாக நமது மருத்துவ முறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
சங்குப்பூ சங்கு புஷ்பம், மாமூலி, கன்னிக் கொடி, காக்கணம், காக்கரட்டான் போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. சங்குப்பூ தமிழகமெங்கும் காடுகள் வேலிகள், தோட்டங்களில் இயற்கையாக வளர்கின்றது. சங்குப்பூ இலை, வேர், மலர்கள், விதை ஆகியவை மருத்துவத்தில் பயன்படுபவை.
 
40 கிராம் சங்குப்பூ வேரை நசுக்கி அரை லிட்டர் நீரில் போட்டு  கால் லிட்டராக காய்ச்சி வடிகட்டி 3 தேக்கரண்டி வீதம் சாப்பிட வேண்டும். 2 மணி நேரத்திற்கு ஒரு முறை 6 முறைகள் ஒரே நாளில் சாப்பிட காய்ச்சல் குணமாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீர் பட்டால் அரிக்கும் விசித்திர நோய்: அக்வாஜெனிக் ப்ரூரிட்டஸ்

ரம்புட்டான் பழம்: சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த பழம்

பெருஞ்சீரகத்தின் நன்மைகள்: சாப்பிட்ட பிறகு ஏன் உட்கொள்ள வேண்டும்?

அதிக உப்பு உட்கொள்வது உடல்நலத்திற்கு ஆபத்தானது.. சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை..!

ஆரோக்கியத்தின் அற்புதம்: தமிழர் பாரம்பரிய உணவான பழைய சோறு!

அடுத்த கட்டுரையில்
Show comments