கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையத்தை நீக்கும் எளிய வழிமுறைகள்...!

Webdunia
தக்காளி ரத்த ஓட்டத்தை அதிகரித்து கண்ணுக்கு கீழே உள்ள மென்மையான தோலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. வெள்ளரி சாப்பிடுவதால்  இணைப்புத்திசு உற்பத்தியை அதிகரிப்பதோடு, சீரற்ற தோலின் நிறத்தை மாற்ற உதவுகிறது.
பாதாமில் உள்ள வைட்டமின் இ வைட்டமின் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதால் தோல் இழுவைத் தன்மையை குறையும். பச்சை காய்கறிகளில் உள்ள  வைட்டமின்கள் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி தோல் அமைப்பை சரி செய்யும்.
 
பாலாடை அல்லது தயிருடன், தேன் கலந்து கண்களுக்கடியில் தடவி, சிறிது நேரம் ஊறவைத்துக் கழுவினால் கருவளையங்கள் மறையும்.
உருளைக்கிழங்கை அரைத்து சாறு எடுத்து பஞ்சில் தொட்டு கண்ணுக்கு அடியில் தடவ வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரினால் கண்களைக் கழுவி வர, ஒரு சில வாரங்களில் கண்களின் கீழ் உள்ள கருவளையம் மறைந்து நல்ல பலனைப் பெறலாம்.
 
சுத்தமான தேங்காய் எண்ணெயை பஞ்சில் தொட்டு கண்ணுக்கு அடியில் மசாஜ் செய்து வந்தால் நாளடைவில் கண் கருவளையம் மறையும். பொதுவாகவே  முகத்திற்கு திராட்சை விதை எண்ணெய் மிகவும் நல்லது. கண்ணுக்கு அடியில் இந்த எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து வந்தால் கருவளையம் மறையும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுநீரக கற்களைக் கரைக்க உதவும் உணவு முறைகள்.. பயனுள்ள தகவல்..!

சரும அழகுக்காக பயன்படுத்தப்படும் பொருட்களால் ஆபத்து.. எச்சரிக்கை தேவை..!

பிறரின் அழுத்தத்திற்காக குழந்தை பெற வேண்டாம்: தம்பதிகளுக்கான முக்கிய ஆலோசனைகள்!

உடல் எடைக்கும் கொலஸ்ட்ராலுக்கும் தொடர்பு உண்டா? மருத்துவர்கள் சொல்வது என்ன?

பெண்களின் பிறப்புறுப்பு அரிப்புக்கான 6 முக்கிய காரணங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments