Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முகத்தில் உள்ள இறந்தசெல்களை நீக்கி சருமத்தை அழகாக்க வேண்டுமா...?

Webdunia
பொதுவாக சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை முழுமையாக நீக்குவதற்கு ப்ளீச்சிங் தான் சரியான வழி. அதற்கு அழகு நிலையங்களுக்குச் சென்று ப்ளீச்சிங் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டிலேயே ப்ளீச்சிங் செய்யலாம்.
அதுவும் வீட்டின் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே மிகவும் சுலபமாக முகத்தின் பொலிவை அதிகரிக்கலாம். மேலும் ப்ளீச்சிங் செய்வதால் சருமத்தின் நிறமும் சற்று அதிகரித்துக் காணப்படும். 
 
உருளைக்கிழங்கை ஒரு பேஸ்ட் போல செய்து உறங்குவதற்கு முன்பு முகத்தில் தடவி, 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இது ஆரோக்கியமான  தோலை தருகிறது.
 
காய்ச்சாத பாலை முகத்தில் தடவி வர அதாவது மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் சுருக்கங்கள் மறையும். ரோஸ் வாட்டர் ஒரு தேக்கரண்டி, தேன் ஒரு தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் தூள் ஒரு தேக்கரண்டி மூன்றையும் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.
முட்டையின் வெள்ளைக்கருவுடன் ஒரு முழு தேக்கரண்டி பாதாம் ஆயிலை நன்கு கலக்க வேண்டும். இந்த கலவையை முகச்சுருக்கம் உள்ள இடத்தில் தடவி  30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ, முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமத்திற்கு தேவையான புரோட்டீன்கள் கிடைக்கும்.
 
தினமும் குளிப்பதற்கு 20 நிமிடங்கள் முன்பு பாதாம் ஆயிலை முகத்தில் தடவி குளித்து வர நாளடைவில் முகம் பொலிவு பெறும்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

தினமும் 10 மணி நேரத்திற்கும் மேல் ஒரே நேரத்தில் உட்கார்ந்திருந்தால் வரும் ஆபத்து..!

காலையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments