Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மஞ்சள் பற்களை வெண்மையாக்க நாங்க இருக்கோம்

மஞ்சள் பற்களை வெண்மையாக்க நாங்க இருக்கோம்
, புதன், 23 செப்டம்பர் 2015 (11:57 IST)
மஞ்சள் நிற பற்களை வெண்மையாக்கி, வலிமையாக்கா அதிகமாக செலவு செய்ய தேவையே இல்ல, எளிய முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே தூள் கிளப்பிடலாம்.

உங்கள் டூத் பேஸ்ட்டில் உப்பு இருக்க? உங்கள் பற்கள் மஞ்சளாக இருக்கா என பல்வேறு விளம்பரங்களை பார்த்திருப்போம். விளம்பரங்களை நம்பி நம் பற்க்களை பாதுகாக்க பல்வேறு முயற்சி செய்து, போதும்டா சாமின்னு வெறுத்துக் கூட போயிருப்போம். இதற்காக நீங்கள் அதிக காசு செலவு செய்து உங்கள் பற்களை பாதுகாக்க வேண்டிய அவசியமே இல்லை. வீட்டில் இருக்கும் பொருட்களே போது உங்கள பற்களை பளிச்சிட வைக்க.

* நம் தாத்தா பாட்டிகள் சாம்பல் கரி கொண்டு பற்களை துலக்கி வந்தார்கள், அதை பார்த்தால் ச்சீ என்று சொல்வீர்கள் ஆனால் அவர்கள் பற்கள் சுத்தமாக, வெள்ளையாக வலுவாகா இருக்கும். இந்த சாம்பல் கரியை அன்றாடம் பயன்படுத்தும் பேஸ்ட்டுடன் சேர்த்து துலக்கினால் உங்கள் பற்களும் வெள்ளையாக, வலுவாக மாறும்.

* பேஸ்ட்டில் சிறிது உப்பு சேர்த்து தினமும் 2 முறை பல் துலக்கினால் பற்களில் உள்ள கறை நீங்கும், இந்த் உப்புக்களை அதிகமாக பயன்படுத்தினால் உங்கள் பற்களின் எனார்மல் பாதிக்கப்படும் எனவே உப்பை அளவாக பயன்படுத்த வேண்டும்.

* பற்களில் உள்ள மஞ்சள் நிற கறையை நீக்க இரவு தூங்க போகும் முன்பு ஆரஞ்சு பழத்தின் தோலை பற்களில் நன்றாக தேய்த்து, அடுத்த நாள் காலையில் பற்களை கழுவ வேண்டும். ஆரஞ்சு பழத்தின் தோலில் உள்ள வைட்டமின் சி மற்றும் கால்சியம் உங்கள் பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை நீக்கி, பற்களின் வலிமையை அதிகரிக்கும்.

* எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து பற்களை தேய்த்து 2 நிமிடம் ஊற வைத்து, பின்பு பற்களை நன்கு கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து 2 வாரங்களுக்கு 2 முறை செய்து வந்தால் பற்கள் வெண்மையாகும். இதற்க்கு காரணம் எலுமிச்சையில் இயற்கையாகவே உள்ள ப்ளீச்சிங் தன்மையாகும்.

* ஆப்பிள், கேரட், வெள்ளரிக்காய் ஆகியவையும் பற்களை வெண்மையாக வைத்திருக்க உதவும், இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல பற்களும் பளிச்சிடும்.

* அதிக காஃபி, டீ மற்றும் புகைப்பழக்கம் நிச்சயம் உங்கள் பற்களை மீண்டும் கறையாகிக் கொண்டு தான் இருக்கும். அளவாக காஃபி, டீ மற்றும் புகைப் பிடிப்பது உங்கள் பற்களுக்கு நல்லது.

Share this Story:

Follow Webdunia tamil