Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சளி, இறுமலை நீக்க சிறந்த கசாயம் இது தான்..

Arun Prasath
புதன், 1 ஜனவரி 2020 (13:51 IST)
சளி, இறுமலை நீக்க அரைக் கீரை மிளகு கசாயம் சிறந்த நிவாரணி என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்

தற்பொழுது குளிர்காலம் என்பதால் இறுமல், சளி ஆகியவை பெரும்பாலானவர்களுக்கு வரக்கூடும். இதனால் சரியாக தூங்க முடியாமல், தங்களது அன்றாட வேலைகளையும் செய்ய முடியாமல் மிகவும் அவதி பட வாய்ப்பு உள்ளது. மேலும் சளி அதிகமானால் தலை பாரம் அதிகமாகும். அது உடலுக்கு பெரும் சோர்வை கொடுக்கும்.

இது போன்ற சளி இறுமலுக்கு அரைக் கீரை மிளகு கசாயத்தை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர், இதற்கு அரைக்கீரை தண்டு ஒரு கைப்பிடியும், கொஞ்சம் மிளகு மற்றும் சிறிதளவு மஞ்சள் போன்றவையே தேவைப்படும்.

கீரையில் உள்ள தண்டை மட்டும் எடுத்துக்கொண்டு, மிளகை தூளாக்கி கொள்ளவும். கீரையின் தண்டை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் 500 மி.லி. அளவு தண்ணீரை ஊற்றி மிளகு தூளையும் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். நன்றாக கொதித்த பிறகு, பாதியாக சுண்ட செய்து சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து வடிகட்டி இறக்கினால் கசாயம் தயார். இந்த கசாயத்தை சளி, இறுமல் உள்ளவர்கள் பருகினால் விரைவில் குணமாகும் என இயற்கை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எவ்வளவு செல்சியஸ் வெயில் இருந்தால் என்ன அலெர்ட்? – பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?

செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

தண்ணீர் குறைவாக குடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

பெண்கள் மேம்பாட்டுக்கான "அன்பு" என்ற புதிய சேவை! சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் தொடக்கம்!

கோடை வெயிலில் தாக்கும் ஹீட் ஸ்ட்ரோக்! பாதுகாப்பாக இருப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments