Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பலவிதமான நோய்களுக்கு நிவாரணம் தரும் இலவங்கப் பட்டை...!!

Webdunia
இலவங்கப் பட்டையில் இயற்கையிலேயே ஆன்டி-பாக்டீரியா தனமை அடங்கி இருப்பதால், இது பாக்டீரியா சார்ந்த பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கிறது.

இலவங்கப்பட்டை ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டது. மூட்டுவலியின் மருந்தாகக் கூட பட்டை பயன்படுத்தப்படுகின்றது. இலவங்கப் பட்டை தேநீர்  அருந்துவதால் அது உடல் நலத்திற்கு மிகவும் ஆரோக்கியமானது
 
இலவங்கப் பட்டை, வயிறு சம்பந்தமான வயிற்றுப் பொருமல், அஜீரணம், நெஞ்செரிச்சல், வயிற்று வலி என அனைத்துவித நோய்களுக்கும் நிவாரணியாக  கருதப்படுகிறது. 
 
இலவங்கப் பட்டை, மனவழுத்தம், மன இறுக்கம், பதட்டம் போன்றவற்றை அமைதிப்படுத்தும். பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளை கட்டுப்படுத்தும்;  மாதவிடாயை சீராக்கும். இரத்த அழுத்தத்தை குறைக்கும்.
 
இரண்டாம் வகை சர்க்கரை நோயாளிகளின் இரத்த சர்க்கரையை சீராக வைத்திருக்க இலவங்கப் பட்டை உதவுகிறது. மேலும் இது இன்சுலினுக்கு துணையாகவும்,  தூண்டுதலாகவும் இருந்து செயல் புரிகிறது.
 
இலவங்கத்தில் ஒரு நல்ல உடல் நலத்திற்கு தேவையான அளவு, மாங்கனீஸ், இரும்பு, கால்சியம் மற்றும் முக்கியமான தாது உப்புக்கள் உள்ளன.
 
இரத்த கொலஸ்டிரால், சர்க்கரை நோயினைக் குறைப்பதாகவும் கண்டறிந்துள்ளனர். தினம் காலை அரை தேக்கரண்டி பட்டை பொடி, 1 தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டால், அது நாள்பட்ட மூட்டு வலியை நன்கு குணப்படுத்துமாம்.
 
இலவங்கப் பட்டை மூட்டு வலி உள்ள நோயாளிகளுக்கு நல்ல தீர்வளிகிறது. இலவங்க பட்டை எண்ணெய்யைக் கொண்டு மசாஜ் செய்வது மற்றும் பட்டையை தேநீரில் கலந்து குடிப்பது போன்றவை நல்ல பயனளிக்கக் கூடியதாக கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்பக புற்றுநோய் வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்?

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

அடுத்த கட்டுரையில்
Show comments