Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடலில் உள்ள பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்ய உதவும் கருணைக்கிழங்கு !!

Webdunia
திங்கள், 18 ஏப்ரல் 2022 (12:05 IST)
கோடை காலங்களில் கருணைக்கிழங்கை சமைத்து அடிக்கடி சாப்பிட்டு வரலாம். உடல் வெப்பத்தையும் மூலசூட்டையும் நீக்கும் சக்தி கருணை கிழங்கில் உள்ளது.


கருணைக்கிழங்கில் உள்ள சத்துக்கள் அனைத்தும் நமது உடலில் உள்ள பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்து நமது உடலின் வளர்ச்சிக்கும் மற்றும் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.

கருணைக்கிழங்கில் வைட்டமின் சி., வைட்டமின் பி, பொட்டாசியம்., இரும்பு சத்துக்கள் உள்ளது. கருணைக்கிழங்கை நன்றாக வேகவைத்து சமைக்க வேண்டும். இல்லையென்றால் நாக்கில் அரிப்பு ஏற்படும்.

வாரத்தில் ஒருமுறை கருணைக்கிழங்கிணை சாப்பிட்டு வருவதன் மூலம் நம் வயிற்றில் உள்ள அமில சுரப்பை சிராக்குகிறது மற்றும் பசியின்மை குணமடைகிறது.

கருணைக்கிழங்கு சாப்பிடுவதால் மாதவிடாய் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் குணமடைகிறது. மூலம் நோய் உள்ளவர்களுக்கு கருணைக்கிழங்கானது சிறந்த இயற்கை குணமுடைய மருத்துவ உணவாக இருக்கிறது. வேறெந்த கிழங்குகளிலும் இல்லாத அளவுக்கு கருணைக்கிழங்கில் அதிக மருத்துவகுணங்கள் உள்ளது.

குடலில் கிருமிகள் சேராமல் இருக்கவும் வயிற்றில் உள்ள உணவு அழுகாமல் வெளியேற்றுகிறது. உடலில் கொழுப்பு அதிக அளவில் சேராமல் தடுக்கின்றது. இக்கிழங்கு கல்லீரலை சிறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குழந்தைகளுக்கு பிஸ்கட் சாப்பிட கொடுப்பது நல்லதா?

சுண்டல் அவித்து சாப்பிடுவதால் கிடைக்கும் வைட்டமின்கள்.. ஆரோக்கியமான ஸ்னாக்ஸ்..!

பலாப்பழத்தில் உள்ள வைட்டமின் என்னென்ன?

பாகற்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

தக்காளியில் இருக்கும் வைட்டமின் சத்துக்கள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments