Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அனைத்தும் நீக்கும் பூனைக்காலி விதைகள் !!

Webdunia
சனி, 11 டிசம்பர் 2021 (14:24 IST)
பூனைக்காலி விதையை நன்றாக பொடி செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அதனை அரை கிராம் அளவு எடுத்து பாலில் சேர்த்து அருந்தி வருவதன் மூலமாக ஆண்மை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும். மேலும் நரம்பு தளர்ச்சி போன்ற பிரச்சினைகளும் சரியாகும்.

பூனைக்காலி விதை, ஜாதிபத்திரி, சமுத்திரப்பச்சை சூடம் வசம்பு ஆகியவற்றை சரியான அளவு எடுத்து தினசரி இரண்டு வேலைகள் அதாவது காலை மாலை என அரை கிராம் முதல் ஒரு கிராம் வரை பாலுடன் சேர்த்து குடிப்பதன் மூலமாக ஆண்மை பெருகும்.
 
பூனைக்காலி விதை, சுக்கு, திப்பிலி, கிராம்பு, வெண் சித்திர மூலம், வேர்ப்பட்டை பூனைக்கண் குங்கிலியம், இவற்றை எடுத்து அதனுடன் நீர் சேர்த்து நன்றாக அரைக்கவும். அதனை சிறு மாத்திரை அளவு உருட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
 
தினசரி ஒரு மாத்திரை வீதம் காலை மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வருவதன் மூலமாக வயிற்றிலுள்ள புழுக்கள் குன்மம் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும்.
 
பூனைக்காலி வேரினை முறையான வகையில் கசாயம் செய்து 30 மில்லி முதல் 60 மில்லி வரை சாப்பிட்டு வருவதன் மூலமாக ஜுரம், வாதம், பித்தம், கபம் போன்ற நோய்கள் குணமாகும்.
 
பூனைக்காலி வேரினை நன்றாக அரைத்து யானைக்கால் பிரச்சனை உள்ளவர்கள் பற்றுப்போட்டு வருவதன் மூலமாக நல்ல பலன் கிடைக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?

பாம்பு போல நாக்கை வெட்டி டாட்டூ: இதனால் என்ன ஆபத்து?

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் சைனஸ் பிரச்சனை.. தீர்வு என்ன?

பாராசிட்டமால் மாத்திரையை அடிக்கடி சாப்பிடுவதால் இவ்வளவு பிரச்சனையா?

சாப்பிட்டவுடன் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஏன்? தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments