Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொன்னாங்கண்ணியின் மருத்துவ குணங்கள்

Webdunia
வியாழன், 31 மார்ச் 2016 (18:36 IST)
கீரைகளின் ராஜா என்று அழைக்கப்படும் பொன்னாங்கண்ணி கீரையில், எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. 


 

 
சாதாரணமாக கீரையின் காம்புகளை கிள்ளி வைத்தாலே எந்த சூழலிலும் வளரக்கூடிய கீரைதான் பொன்னாங்கண்ணி. இதில் பொன்னாங்கண்ணி கீரையில் ஊட்டச்சத்து, நீர்ச்சத்து, கொழுப்புச்சத்து, மினரல்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், புரதம் போன்ற சத்துகள் அடங்கியுள்ளது.
 
இ‌ந்த‌க் ‌கீரையை தொடர்ந்து 27 நாட்களுக்கு சாப்பிட்டால் பகலிலும் நிலவைப் பார்க்கலாம் என்று ஒரு பழமொழி உண்டு. அந்த அளவிற்கு கண்பார்வைக்கு மிக துல்லியமாக தெரிய உதவும். 
 
பயன்கள்!
 
1. பொ‌ன்னா‌ங்க‌ண்‌ணி கீரையுடன் மிளகும், உப்பும் சேர்த்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் உடல்  எடை குறையும்.
 
 2. துவரம் பருப்பு, நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை கூடும். 
 
3. உடலை, தோலைப் பளபள என்று மாற்றுவதில் பெரும் பங்கு பொ‌‌ன்னா‌ங்க‌ண்‌ணி‌க்கு உ‌ண்டு. 
 
 4. மூல நோய், மண்ணீரல் நோய்களைப் குணப்படுத்த வ‌ல்லது. 
 
 5. இன்று நாம் உண்ணும் உணவிலும் சுவாசிக்கும் காற்றிலும் இரசாயனம் கலந்திருப்பதால் அவை நேரடியாக இரத்தத்தில் கலந்து விடுகின்றன. இதனால் இரத்தம் அசுத்தமடைகின்றன. பொன்னாங்கண்ணி கீரையை நன்றாக அலசி சிறிதாக  நறுக்கி, அதனுடன்  பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம்,  சீரகம், பூண்டு, மிளகுத்தூள் சேர்த்து வேகவைத்து மசியல் செய்து சாப்பிட்டு  வந்தால் அசுத்த இரத்தம் சுத்தமாகும், உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும்.
 
 6. அதிக வெயிலில் அலைந்து வேலை செய்பவர்களுக்கும், கணினி முன் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு, சரியான தூக்கம் இல்லாதவர்களுக்கு கண்கள் சிவந்து காணப்படும், கண்களில் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். இவர்கள் பொன்னாங்கண்ணி கீரையை பொ‌ரியல் செய்து சாப்பிட்டு வந்தால் இப்பிரச்சனை நீங்கும். 
 
 7. பொன்னாங்கண்ணி கீரை வாய் துர்நாற்றத்தை போ‌க்கு‌ம்.
 
 8. இதயத்திற்கும் மூளைக்கும் புத்துணர்வு கொடு‌க்கு‌ம் வ‌ல்லமையு‌ம் பெ‌ற்று‌ள்ளது இ‌ந்த பொ‌ன்னா‌ங்க‌ண்‌‌ணி ‌கீரை. 

தினமும் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

கேழ்வரகு உணவுகளில் இருக்கும் சத்துக்கள் என்னென்ன?

சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகள்..!

இரவில் புரோட்டா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

சின்ன வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?

Show comments