Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பலவித நோய்களை குணப்படுத்தும் பொன்னாங்கண்ணி கீரை !!

Webdunia
கீரைகளின் ராஜா என்று அழைக்கப்படும் பொன்னாங்கண்ணிக் கீரை பலவித நோய்களை குணப்படுத்த உதவும் அற்புத உணவாகவும் மூலிகையாகவும் திகழ்கிறது.

கீரையை சமைத்து சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான சத்துகள் கிடைப்பதுடன் பல நோய்களைக் குணப்படுத்தவும் முடியும். பொன்னாங்கண்ணிக் கீரை காச நோய், இருமல், கண்நோய்கள், வெப்ப நோய்கள், வாத நோய்கள் போன்றவற்றை குணமாக்கக் கூடிய சிறந்த உணவாகும்
 
பொன்னாங்கண்ணி கீரையுடன் மிளகும், உப்பும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். இது உடல் எடையை குறைக்க மட்டுமில்லாமல் அதிகரிக்கவும் உதவுகிறது. பொன்னாங்கண்ணி கீரையில் துவரம் பருப்பு, நெய் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும், எலும்புகள் உறுதியாகி உடல் வலிமை பெரும்.
 
பொன்னாங்கண்ணி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வாயில் இருந்து வரும் துர்நாற்றம் நீங்கும். செல்போன், கணிணி பார்ப்பவர்கள், இரவில் சரியாக  தூக்கம் வராதவர்கள் பொன்னாங்கண்ணி கீரையை பொறியல் செய்து சாப்பிட்டு வந்தால் கண் சிவத்தல் நீங்கி நன்றாகப் தூக்கம் வரும்.
 
பொன்னாங்கண்ணி கீரையை கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கி, அதனுடன் பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு, மிளகுத்தூள் சேர்த்து வேகவைத்து சமையல் செய்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமாகும்.
 
பொன்னாங்கண்ணி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவாக தெரியும். பொன்னாங்கண்ணி கீரையை சாப்பிடுவதால் இதயம் மற்றும் மூளை  புத்துணர்வு பெற்று சுறுசுறுப்பாக செயல்பட உதவும். மேலும் மூலநோய் மற்றும் மண்ணீரல் நோய்யை குணப்படுத்த உதவுகிறது.

தொடர்புடைய செய்திகள்

சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகள்..!

இரவில் புரோட்டா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

சின்ன வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?

கால்கள் மரத்து போகாமல் இருக்க சரியான உடற்பயிற்சி எவை எவை?

நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்னென்ன நன்மைகள்?

அடுத்த கட்டுரையில்
Show comments