Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாதவிடாய் காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை தெரியுமா...!

Webdunia
மாதவிடாய் காலகட்டத்தில் இரும்புச்சத்து மிகுந்த உணவுகள், வைட்டமின் கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்வது சிறந்தது. அதே சமயம் சில உணவுகளை தவிர்ப்பதும் நல்லது அவை எவை என காண்போம்.
வெள்ளை பிரட், பாஸ்தா, பாக்கெட் செய்யப்பட்ட உருளைக்கிழங்கு சிப்ஸ், கேக் போன்ற சுத்திகரிக்கப்பட்ட உணவுகளை மாதவிடாய் காலத்தில் சாப்பிடாமல்  இருப்பது நல்லதாகும்.
 
கொழுப்பு நிறைந்த உணவுகள் மற்றும் எண்ணெய்யில் வறுக்கப்பட்ட உணவுகளை மாதவிடாய் காலத்தில் எடுத்துக் கொள்வது என்பது கூடாது.
 
அதே போல், துரித உணவுகள், கொழுப்பு மிகுந்த இறைச்சி, சீஸ், கொழுப்பு மிகுந்த பால் பொருட்கள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
 
மாதவிடாய் காலத்தில் அதிகமாக வயிற்றுப்போக்கு உண்டானால், உணவில் உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டியது அவசியமாகும்.
 
மிட்டாய், சோடா, இனிப்பு உள்ள பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்ப்பானங்கள் போன்ற உணவுகளை மாதவிடாய் காலத்தில் தவிர்க்கலாம்.
 
ஆல்கஹால் பருகுவது மாதவிடாய் காலத்தில் உள்ள வலியை அதிகரிக்க செய்யும். இது உடலுக்கு அதிக சோர்வை உண்டாக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தினசரி ஓட்டம்: உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கான அற்புத மருந்து!

அவித்த முட்டை Vs ஆம்லெட்: ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது?

வெண்டைக்காய்: ரத்த அழுத்தம், சர்க்கரை நோயாளிகளுக்கு பலன்!

பெண்களுக்கு அதிக இதய நோய் பாதிப்பு! விழிப்புணர்வு தேவை..!

எடை குறைப்பிற்கு சைவ உணவே சிறந்தது: புதிய ஆய்வு முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments