Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வயிற்று புண் மற்றும் கண் பார்வை குறைபாட்டை எளிதில் குணப்படுத்தும் முளைக்கீரை!

Webdunia
முளைக்கீரை வயிற்றுப்புண்ணை ஆற்றுவதில் முன்னணியில் இருக்கிறது. கண்பார்வையை கூர்மையாக்கக்கூடியது. இந்த  கீரையில் கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்து நிறைந்துள்ளது.



முளைக்கீரையில் 80 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. இது தவிர நார்ச்சத்தும், மாவுச்சத்தும் குறிப்பிடும் அளவுகளில் உள்ளது. அதனால், உடல் வலுவடையவும், வளரும் சிறுவர்களுக்கு இந்த  கீரையை தொடர்ந்து கொடுத்து வந்தால் உடல் நல்ல வளர்ச்சி அடையும்.
 
* இக்கீரையில் அடங்கியுள்ள இரும்பு மற்றும் தாமிர சத்து, ரத்தத்தை சுத்தம் செய்வதோடு, இதில் அடக்கியுள்ள மணிச்சத்து  மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. முளைக்கீரை, அதிமதுரம் ஒரு துண்டு, மஞ்சள் 3 சிட்டிகை மூன்றையும் சேர்த்து கஷாயமாக செய்து சாப்பிட்டால் எப்படிப்பட்ட இருமலும் குணமாகும்.
 
முளைக்கீரையுடன் சீரகத்தை நெய்யில் வறுத்து சேர்த்து, மிளகாய் வற்றலை கிள்ளிப்போட்டு, தண்ணீர் சேர்த்து அவித்து சாற்றை வடித்து, சாதத்தோடு கலந்து சாப்பிட்டால் அனைத்து வகையான காய்ச்சலும் குணமாகும்.
 
* முளைக்கீரை, துத்திக்கீரை இரண்டையும் சம அளவு எடுத்து, சிறுபருப்பு சேர்த்து சமைத்து சாப்பிட்டால் உள்மூலம், பவுத்திர  கட்டி, ரத்த மூலம் போன்றவை சரியாகும்.
 
* முளைக்கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம், மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிட்டால்  பசியின்மை நீங்கி, நல்ல பசி உண்டாகும்.
 
* முளைக்கீரையுடன் சிறிது புளிச்ச கீரை, மிளகு, மஞ்சள், உப்பு சேர்த்து அவித்து சாப்பிட்டால் ருசியின்மை குறைபாடு நீங்கும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவக் குணங்கள் நிறைந்த நாவல் மரம்: ஒரு முழுமையான பார்வை

சுவாசம் பிரச்சனை, ஆஸ்துமா பிரச்சனையா? சித்த மருத்துவத்தில் உள்ள தீர்வுகள்!

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இரவு உணவை எப்போது எடுக்க வேண்டும்?

IIRSI 2025 மாநாடு: மொரிஷியஸ் அமைச்சர் அனில் குமார் பச்சூ, தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தனர்!

மாதுளை தோலின் மகத்துவங்கள்: தூக்கி எறியும் முன் யோசியுங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments