Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆரோக்கியமான எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவும் வேர்க்கடலை !!

Webdunia
வேர்க்கடலை பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் சிறந்த மூலமாகும். வேர்க்கடலையில் உள்ள பாஸ்பரஸ் உடல் திசுக்களின் வளர்ச்சி மற்றும் பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.

வேர்க்கடலையில் உள்ள நார்ச்சத்து இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. இதில் பங்கு வகிக்கும் மெக்னீசியம் மற்றும் பிற ஆரோக்கியமான  அமிலங்களும் அவற்றில் உள்ளன.
 
வேர்க்கடலையில் வைட்டமின் பி 3 மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை நிறைந்துள்ளன. இதனால் வேர்க்கடலை சாப்பிடுவது அல்சைமர் நோயில் இருந்து பாதுகாக்க உதவும். மேலும் மூளையில் உயிரணு சேதத்தை தடுக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. 
 
வேர்க்கடலை சாப்பிடுவதன் மூலம் கெட்ட கொழுப்பு அளவை குறைக்கலாம். மோசமான கொழுப்பு இரத்த நாளங்களில் கொழுப்பு வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. வேர்க்கடலை சாப்பிடுவதன் மூலம் இதைத் தடுக்கலாம்.
 
வேர்க்கடலையில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்து இருப்பதால் ஆரோக்கியமான எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு இது உதவுகிறது.
 
உணவு கட்டுப்பாட்டில் இருக்கும் போது வேர்க்கடலை சாப்பிடுவது உங்கள் எடை அதிகரிக்கும் என்பது பொதுவான தவறான கருத்தாகும். வேர்க்கடலையில் உள்ள  கொழுப்பு பெரும்பாலும் நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் ஆகும். இது உயர் கொழுப்பு அளவுகளை தடுக்க உதவுவதோடு, உடலில் ஒரு ஆரோக்கியமான  சமநிலையை பராமரிக்க உதவும்.
 
தோலில் எண்ணெய் பதத்தை தொடர்ந்து பராமரிக்க வேர்க்கடலையை அடிக்கடி உட்கொண்டு வருவது நல்லது. வேர்க்கடலையில் நிறைந்துள்ள ஆண்டிஆக்ஸிடண்ட்ஸ் அப்பழுக்கற்ற சருமத்தை தரக்கூடியது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

அடுத்த கட்டுரையில்
Show comments